டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்
சென்னை:
ஆறுகளில் மணல் அள்ளும் உரிமை தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து தமிழகம் முழுவதிலும்உள்ள மணல் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆறுகளில் மணல் அள்ளும் உரிமையை தனியார்களுக்கு ரத்து செய்து அரசே ஏற்று நடத்தி வருகிறது.இந் நிலையில் ஆறுகளில் இருந்து அரசு மணல் டிப்போக்களுக்கு மணல் எடுத்து வரும் உரிமை சமீபத்தில்ஆறுகச்சாமி என்பவருக்கு வழங்கப்பட்டது.
இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனியார்களிடமிருந்து மணல் எடுக்கும்உரிமையைப் பறித்த அரசு தற்போது ஒரே ஒருவருக்கு மட்டும் மணல் அள்ளும் உரிமையை வழங்குவதற்குஎதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.
இதையடுத்து இன்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதனால் சென்னை, சேலம்,திருவள்ளூர், மதுரை, ஈரோடு, கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் லாரிகள் ஓடவில்லை. இதன்காரணமாக கட்டுமானப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் இன்று காலை அமைச்சர்கள் பொன்னையன், ஓ.பன்னீர் செல்வம், விஸ்வநாதன் ஆகியோர் மணல்லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால்போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த மணல் லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications