ஜெ. சொல்வதில் தப்பே இல்லை: திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தீத்தனின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ள கருத்துக்கள் சரியானதே என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பியுமான திருநாவுக்கரசர்கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மாநில சட்டசபையில் கூட வைக்கப்படாத கணக்கு வழக்கு விவரங்களை அவசர கதியில் செய்தியாளர்களிடம்கணக்கு தணிக்கை அதிகாரி தீத்தன் வெளியிட்டது தவறானது. இந்த பேட்டிக்கு, பத்திரிக்கை விளம்பரங்கள் மூலம்முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்ததில் தவறில்லை, அவரது கருத்துக்கள் சயானவையே.

தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இதற்கு எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டதமிழக அரசு முனையக் கூடாது. சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்என்றார் அவர்.












Click it and Unblock the Notifications