மதுரையில் வைகோவுக்கு பிரமாண்ட வரவேற்பு
மதுரை:
நடை பயணமாக திருமங்கலம் வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வரவேற்க பிரமாண்டமானஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை அருகே திருமங்கலத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாகத் தான் வைகோ பொடா சட்டத்தில்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது நடை பயணம் கிளம்பியுள்ள வைகோ,திருமங்கலத்தில் பொதுக் கூட்டத்தில் பேசவும், அங்கு ஒரு இரவு தங்கி இருக்கவும் முடிவு செய்துள்ளார்.
திருமங்கலம் வரும் வைகோவுக்கு மாபெரும் வரவேற்பு தர மதுரை நகர், புறநகர், ஊரக மாவட்ட மதிமுகவினர்திட்டமிட்டுள்ளனர்.
நெல்லையில் இருந்து நடை பயணம் கிளம்பியுள்ள வைகோ, சாத்தூர் வழியாக இன்று காலை விருதுநகர்கிளம்பினார். விருதுநகர் அம்மன் திடல் பகுதியில் பொதுக் கூட்டத்தில் பேசும் அவர்ஸ இரவு அங்கேயேதங்குகிறார்.
நாளை காலை கிளம்பி திருமங்கலம் வருகிறார். அங்கு பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டுத் தங்குகிறார். புதன்கிழமைஅவர் மதுரை வருகிறார்.
திருமங்கலத்திலும் மதுரையிலும் வைகோவுக்கு வரலாறு காணாத வரவேற்பு கொடுக்க மதுரை மாநகர் மாவட்டமதிமுக நிர்வாகிகள் முடிவு செய்து ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
நடை பயணமாக வரும் வைகோவுக்கு வழியெங்கும் மதிமுகவினரும், பொதுமக்களும் சிறப்பான வரவேற்பளித்துவருகின்றனர். குறிப்பாக கிராமப் புறங்களில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.












Click it and Unblock the Notifications