நக்ஸல்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்
திண்டிவனம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் 35 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக வந்ததகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் தலைமை தபால் அலுவலக அதிகாரி பாலாஜிக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தைஆட்சிப்பாக்கம் மக்கள் போர்க்குழு உறுப்பினர்களான சங்கர் மற்றும் சுப்ரமணியன் ஆகியோர் எழுதியதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், நாங்கள் கூட்டாக சாராய வியாபாரம் செய்து வந்தோம். விழுப்புரம் மாவட்ட காவல்துறையின்கடுமையான நடவடிக்கையின் காரணமாக எங்களுக்கு ரூ. 5 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது.
இதைக் கண்டித்து திண்டிவனம் நகரமே குலுங்கும் அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை நடத்த முடிவுசெய்துள்ளோம்.
திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் 10 வெடிகுண்டுகளும், மேலும் 30 இடங்களில் கண்ணி வெடிகளையும் புதைத்துவைத்துள்ளோம். மொத்தம் 35 இடங்களில் வெடிகுண்டுகளையும், கண்ணி வெடிகளையும் புதைத்துவைத்துள்ளோம்.
தபால் நிலையம், தியேட்டர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், நீதிமன்றம் எனஅனைத்து அரசு அலுவலகங்கள், கட்டடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சித் தலைவர்,காவல்துறைக் கண்காணிப்பாளர், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப் போகிறோம் என்றுகூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. நக்ஸலைட்டுக்கள் பெயரில் கள்ளச்சாரயகும்பல் தான் இந்த மிரட்டலை விடுத்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications