வழக்கறிஞர்கள் மோதல் : 3 பேருக்கு கத்திக்குத்து
சென்னை:
போராட்டத்தைக் கைவிட்ட சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கும், போராட்டத்தைத் தொடரும்வழக்கறிஞர்களுக்கும் இடையே இன்று பயங்கர அடிதடி, மோதல் நடந்தது. இதில் 3 பேருக்கு கத்திக் குத்துவிழுந்தது.
இந்த மோதலில் ஈடுபட்ட அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரேம்நாத்தை கட்சியை விட்டு நீக்கி முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு எதிராக நடத்திய போராட்டத்தை பிரபாகரன்தலைமையிலான வழக்கறிஞர்கள் நேற்று வாபஸ் பெற்றனர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிருப்திவழக்கறிஞர்கள் அதிமுகவைச் சேர்ந்த பிரேம்நாத் தலைமையில் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் இன்று காலை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரபாகரன் கோஷ்டி வழக்கறிஞர்களுக்கும்,பிரேம்நாத் கோஷ்டி வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் வழக்கறிஞர்களான மோகன்தாஸ், சண்முகம் மற்றும் ஒரு வழக்கறிஞருக்கு கத்திக் குத்து விழுந்தது.இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். கத்திக் குத்தில் காயமடைந்த 3 பேரும் சென்னை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிரேம்நாத் கோஷ்டியைச் சேர்ந்த 3 வழக்கறிஞர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பிரேம்நாத் கட்சியை விட்டு நீக்கப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமானஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுகவின் குறிக்கோளுக்கும்,கோட்பாடுகளுக்கும் எதிராக பிரேம்நாத் நடந்து கொண்டுள்ளார்.
அவரது செயல்பாடுகள் கட்சிக்கு அவப் பெயர் உண்டாக்கியுள்ளது. கழகத்தின் கண்ணியத்திற்கு மாசுஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னை மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பிரேம்நாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர்உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் கழக உடன்பிறப்புகள் எந்தவிதத்தொடர்புகளையும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என ஜெயலலிதாகூறியுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications