கொளத்தூர் மணி கைது: அதிகாரிக்கு மிரட்டல்
கொளத்தூர்:
பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியைக் கைது செய்த காவல்துறை இன்ஸ்பெக்டருக்குதொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கொளத்தூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் அவரது தந்தையை ஒரு கும்பல் 2 நாட்களுக்கு முன்புஅரிவாளால் வெட்டியது. இந்த வழக்கில் கொளத்தூர் மணி, அவரது தம்பி உள்ளிட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கொளத்தூர் மணி தற்போது சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கொளத்தூர் காவல் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி மிரட்டல் வந்தது.
அதில் பேசிய நபர், எங்கள் தலைவர் கொளத்தூர் மணி மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ளஇன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியை ஒழித்துக் கட்டாமல் விட மாட்டோம். பொய் வழக்கை வாபஸ் பெறாவிட்டால்எங்களிடமிருந்து தப்ப முடியாது என்று கூறியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி உயர்அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொளத்தூர் காவல் நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications