கடலூரை உறிஞ்சும் அரசு: விவசாயிகள் கோபம்
கடலூர்:
சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீரை தமிழக அரசு அதிகஅளவு எடுப்பதை எதிர்த்து மாபெரும் விவசாயிகள் போராட்டம் ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் தேவைக்காக புதிய வீராணம் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. ஆனால் வீராணம்ஏரியில் போதிய நீர் இருப்பு இல்லாததால், நெய்வேலி அருகே உள்ள கிராமங்களிலிருந்து ஆழ்குழாய்க்கிணறுகள் மூலம் குடிநீர் எடுக்கப்படுகிறது.
45 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு ராட்சத பம்ப் செட்டுகள் மூலம் நீர் உறிஞ்சப்படுகிறது. இந்த நீர் ராட்சதகுழாய்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. சென்னையின் குடிநீர்த் தேவைக்காககடலூர் மாவட்ட நிலத்தடி நீரை தமிழக அரசு அதிக அளவில் சுரண்டுவதற்கு அம்மாவட்ட விவசாயிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில் கடலூர் மாவட்டம் கடம்புலியூரில் பல்வேறு விவசாய அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின்ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், புதிய வீராணம் திட்டத்தை உடனடியாக அரசுகைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில், பண்ருட்டி-வடலூர் நெடுஞ்சாலையில் 40க்கும் மேற்பட்டஇடங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை அரசு சுரண்டி வருவது கண்டனத்துக்குரியது என்றும்
ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் இப்பிராந்தியத்தில், நிலத்தடி நீரின் அளவு வெகுவாக குறைந்துபோய் விட்டது. தற்போது ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் சென்னைக்கு தண்ணீர் உறிஞ்சப்படுவது தொடர்ந்தால்இன்னும் ஒரு ஆண்டில் கடலூர் மாவட்டமே நிலத்தடி நீரின்றி வறண்டு போய் விடும் என்றும் விவசாயிகள் கவலைதெரிவித்தனர்.
அரசின் போக்கைக் கண்டித்து வருகிற 26ம் தேதி பண்ருட்டியில் அனைத்து விவசாயிகளையும் திரட்டி மாபெரும்ஆர்ப்பாட்டத்தை நடத்த இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications