நீக்கியது செல்லாது: மதுரை இளைய ஆதீனம்
திருத்துறைப்பூண்டி:
மதுரை ஆதீனம் என்னை நீக்கியது சட்டப்படி செல்லாது என பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இளைய ஆதீனம்கூறியுள்ளார்.
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருநெல்வேலியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் சமீபத்தில் முடிசூட்டப்பட்டார். இதுதொடர்பாக மதுரை ஆதீனகர்த்தர், அதிகாரப்பூர்வமாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.
இந் நிலையில், இளைய ஆதீனகர்த்தரின் குடும்பத்தினர், ஆதீன நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், இளையஆதீனம் தனது சமயப் பணிகள் குறித்து அக்கறை காட்டாமல் இருப்பதாகவும் கூறி அவரை நேற்று அதிரடியாகபதவிநீக்கம் செய்தார் மதுரை ஆதீனம்.
இந்த நீக்கம் குறித்து திருத்துறைப்பூண்டியில் இருக்கும் இளைய ஆதீனம் கருத்து தெரிவிக்கையில், இது சட்டப்படிசெல்லாது. எனக்கு இளவரசு பட்டம் சூட்டி, அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்த பின், என்னை நீக்குவதாகஅறிவித்துள்ளது நியாயமற்றது, சட்டப்படி செல்லாதது.
எனது குடும்பத்தினர் ஆதீன நிர்வாகத்தில் தலையிடுவதாக கூறுவதில் உண்மையில்லை. நான் துறவறம் பூண்டவன்,குடும்ப பந்தங்களை உதறி விட்டேன். துறவறத்தை கைவிடப் போவதும் இல்லை.
என்னை மீண்டும் மூத்த சன்னிதானம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகுறித்து முடிவெடுத்து அறிவிப்பேன் என்றார் அவர்.
அண்மைக் காலமாக சேலம் குட்டிச் சாமியாருக்கு குருவாக மதுரை ஆதீனம் மாறியுள்ள பின்னணியில், ஆதீனஇளவரசு பட்டத்திலிருந்து இளைய ஆதீனத்தை பதவி நீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications