திண்டுக்கல்லில் கள்ள நோட்டு கும்பல் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் கள்ள நோட்டுகள் அச்சடித்த 5 பேரை சென்னை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்த ரூ. 24 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளும், கள்ள நோட்டு அடிக்க தயாரிக்கப்பயன்படுத்திய கம்ப்யூட்டர் , லேசர், ஸ்கேனர் கருவிகளும் கைப்பற்றப்பட்டன.
திண்டுக்கல்லில் ஒரு கும்பல் கள்ள நோட்டுகள் அச்சடித்து வெளிமாநிலங்களில் புழக்கத்தில் விடுவதாக சென்னைசி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இக் கும்பலைப் பிடிக்க ஒரு தனிக் குழு நியமிக்கப்பட்டது. இந்நிலையில் கள்ள நோட்டு கும்பலைசேர்ந்த சடையாண்டி என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போலீஸார் அவர் மூலமாக மற்றவர்களைவளைத்துப் பிடித்தனர்.
திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனியில் உள்ள ஒரு வாடகை பங்களாவில் ரூ. 21 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய்கட்டுகள், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 100 ரூபாய் கட்டுகள், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 50 ரூபாய் கட்டுகள்கைப்பற்றப்பட்டன. கள்ள நோட்டு அடிக்கப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், லேசர், ஸ்கேனர் கருவிகளும்கைப்பற்றப்பட்டன.
கள்ள நோட்டுக் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த ஜபருல்லாகான் (56),சித்தையன் கோட்டையை சேர்ந்த சடையாண்டி (25), விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி (46), மதுரைகட்ராபாளையம் பகுதியைச் சேர்ந்த மதன் சேட் (35), தக்காராம் சேட் (35) ஆகியோரையும் போலீஸார் கைதுசெய்தனர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications