புகாரை ஜெ. நிரூபிக்க வேண்டும்: பாஜக
சென்னை:
தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டபடி, வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடந்ததாகக் கூறிய புகாரைமுதல்வர் ஜெயலலிதா நிரூபிக்க வேண்டும் என்று காங்கிரசும் பாஜகவும் வலியுறுத்தியுள்ளன.
அகில இந்திய பாஜக பொதுச் செயலாளர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகப் புகார் கூறியவர் சாதாரண நபர் அல்ல. தமிழக முதல்வர்.தேர்தல் ஆணையம் மீது அவர் கூறியது பயங்கரமான குற்றச்சாட்டு ஆகும்.
அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தத் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரத்தையும் எடுத்து சோதனைசெய்யலாம் என்று தேர்தல் ஆணையம் வாய்ப்பு அளித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
இந்த வாய்ப்பை ஜெயலலிதா பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தைப்பகிரங்கமாக சோதனை செய்து தான் கூறிய புகாரை நிரூபிக்க வேண்டும். வாக்களிப்பதில் மக்களுக்குநம்பிக்கையை ஏற்படுத்த, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சோதனை செய்ய ஜெயலலிதா முன்வரவேண்டும் என்று கூறினார்.
காங்கிரஸ் வலியுறுத்தல்:
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா கூறிய புகாரைத்தேர்தல் ஆணையம் நிராகரித்திருப்பது, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு முதல்வர், தேர்தல் ஆணையத்தின் மீது புகார்களை அள்ளித் தெளிப்பதுஜனநாயகத்தைப் பலவீனமாக்கும்.
தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, தனது குற்றச்சாட்டை நிரூபிக்க அதிமுகவும்,ஜெயலலிதாவும் தயாரா என்று கேட்டிருக்கிறார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications