மாணவியை கற்பழித்தவனுக்கு நாளை தூக்கு
கொல்கத்தா:
கொல்கத்தாவில் 14 வயது பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த தனஞ்செய்க்கு நாளை அதிகாலைதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இந்த தண்டனையை நிறுத்த, கடைசி முயற்சியாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு மீது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதனால் தனஞ்செய்க்கு நாளை காலைதூக்கு தண்டனை உறுதியாகிவிட்டது.
அவரை நாளை காலை 4.30 மணிக்கு தூக்கில் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளி மாணவியை கற்பழித்துக் கொன்ற வழக்கில் 1990 ம் ஆண்டு அலிப்பூர் நீதிமன்றம் தனஞ்செய்க்கு தூக்குதண்டனை வழங்கியது. அதை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.
1992ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனஞ்செய் தாக்கல் செய்த கருணை மனு, ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரால்நிராகரிக்கப்பட்டது. அதற்கு அடுத்த மாதம் தனஞ்செய் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை வாங்கினார்.
இந்தத் தடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீக்கப்பட்டது. அதனையடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம்மீண்டும் கருணை மனு தாக்கல் செய்தார். இந்த மாத தொடக்கத்தில் தனஞ்செய்யின் கருணை மனுவை கலாம்நிராகரித்தார்.
பின்னர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதுவும் நிராகரிக்கப்பட்டது.
இந் நிலையில் தனது பிறந்த தினமான, நாளை தனஞ்செய் தூக்கில் போடப்பட உள்ளார். அவரது உடலைஉறவினர்கள் வாங்க மறுப்பதால் மேற்கு வங்காள அரசே அதற்கு எரியூட்டவுள்ளது.












Click it and Unblock the Notifications