பேட்டி கொடுக்க தீதனுக்கு உயர்நீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாடு கணக்கு தணிக்கை அதிகாரி தீதன், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்க சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு கணக்கு தணிக்கை அதிகாரி தீதன், அந்தப் பதவியில் எந்த தகுதியின் கீழ் நீடிக்கிறார் என்று விளக்கம்கேட்டு அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மாநிலங்களவை அதிமுக தலைவர் பி.ஜி.நாராயணன், கொறடா மலைச்சாமி ஆகியோர் இதுதொடர்பாகஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

கடந்த ஜூலை 31ம் தேதி பத்திக்கையாளர் கூட்டம் நடத்தி, தமிழக சட்டசபையில் வைக்கப்படாத மாநில அரசின்கணக்கு வழக்குகளை பகிரங்கமாக செய்தியாளர்களுக்கு வெளியிட்டுள்ளார் தீதன்.

இதன் மூலம் கணக்குக் தணிக்கை அதிகாரி பதவியில் நீடிப்பதற்கான தகுதியை அவர் இழந்து விட்டார். அவரதுவரம்பை மீறி தீத்தன் செயல்பட்டுள்ளார்.

அரசியல் சட்டம் 151((2)ன் கீழ் மாநில அரசு சம்பந்தப்பட்ட கணக்குகள், மாநில ஆளுநரிடம் மட்டுமேஅளிக்கப்படலாம். பத்திரிக்கைகளுக்கோ, தொலைக்காட்சிக்கோ கொடுக்கப்படக் கூடாது. ஆளுநரிடம் கூடஇந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி மட்டுமே வழங்க முடியும், அவருக்குக் கீழ் பணியாற்றும் தீதன்போன்ற அதிகாரிகள் மாநில அரசின் கணக்குகளை வெளியிட அதிகாரம் இல்லை.

ஆளுநரிடம் வழங்கப்படும் கணக்கு, வழக்கு விவரங்கள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல்பெறப்படும். இதுதான் அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறை. இதில் தீதன் போன்ற அதிகாரிகள்தலையிட எந்தவிதத்திலும் வழி இல்லை.

சட்டசபைக் கூட்டம் முடிவடைந்த நாளான ஜூலை 31ம் தேதி தீதன் பத்திரிக்கையாளர்களை அழைத்து மாநிலஅரசின் கணக்கு, வழக்கு விவரங்களை வெளியிட்டுள்ளார். வெளியில் உள்ள சிலரின் தூண்டுதலின் பேரிலும்,ஊக்குவிப்பின் காரணமாகவுமே தீதன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.

அரசியல் சட்டத்தை மீறி நடந்து கொண்டுள்ள தீதன் எந்தத் தகுதியின் கீழ் இன்னும் பதவியில் நீடிக்கிறார் என்பதைநீதிமன்றம் விளக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி அசோக் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்தமனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தது. மேலும், இதுதொடர்பாக விளக்கம்அளிக்குமாறு மத்திய தலைமை வழக்கறிஞர் வி.டி.கோபாலனுக்கு நோட்டீஸ் அனுப்பவும், வழக்கு முடியும் வரைதீதன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்கவும் நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+