ஏதென்ஸ்: இன்று ஒலிம்பிக் கோலாகல தொடக்கம்
ஏதென்ஸ் :
2004 ஒலிம்பிக் போட்டிகள் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் நகரில் இன்று தொடங்குகின்றன.
ஒலிம்பிக் போட்டிகளின் தாயகமான கிரீஸ் நாட்டில் தொடங்கும் இந்த ஒலிம்பிக் வரும் 29ம் தேதி வரை நடக்கும்.202 நாடுகளைச் சேர்ந்த 10,000க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கின்றனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர், பிரான்ஸ் அதிபர் சிராக் உட்படஆயிரக்கணக்கானோர் இந்தப் போட்டிகளை நேரில் பார்க்கவுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மட்டும் கிரீஸ் அரசு ரூ.7,000 கோடி செலவழித்துள்ளது.
கடந்த 24 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் எதையும் வெல்லாத இந்தியா, 75 பேர் அடங்கியஅணியை ஏதென்ஸ் நகருக்கு அனுப்பியிருக்கிறது.
டென்னிஸில் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி, தடகளத்தில் அஞ்சு ஜார்ஜ், பளு தூக்குதலில் மல்லேஸ்வரி,துப்பாக்கி சுடுதலில் அஞ்சலி பகவத் மற்றும் இந்திய ஹாக்கி அணி பதக்கத்தைப் பெற்றுத் தருவார்கள் என்றநம்பிக்கையை அளித்துளளனர்.
ஏதென்ஸ் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள புராதன பானதீனியன் மார்பிள் அரங்கில் இன்று நடைபெறும் தொடக்கவிழாவில், இந்திய தேசியக் கொடியை அஞ்சு ஜார்ஜ் ஏந்திச் செல்லவிருக்கிறார்.
தொடக்க விழாவை டிடி ஸ்போர்ட்ஸ் சேனல் இன்று இரவு 10.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications