வடிவேலுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
சென்னை:
ரூ.5 லட்சம் பணம் கேட்டு நடிகர் வடிவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்த சிவகங்கை வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
நடிகர் வடிவேலு சாலிக்கிராமம் லோகையா காலனி, 4வது குறுக்கு தெருவில் தங்கியிருக்கிறார். அவரது வீட்டில்சமீபத்தில் ஒரு மர்ம நபர் ஒரு கடிதத்தை வீசிவிட்டுச் சென்றார். அந்தக் கடிதத்தில்,
வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு, எனக்கு ரூ.5 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் நாட்டு வெடிகுண்டுவைத்து குடும்பத்தையே கொன்று விடுவேன். கே.கே. நகர் சகாத்தம்மன் கோவில் அருகே பணத்துடன்வரவேண்டும். இதை வெளியில் சொன்னால் குடும்பம் சீரழிந்து விடும். இப்படிக்கு மர்ம கும்பல் என்று எழுதப்பட்டுஇருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த வடிவேலு போலீஸில் புகார் தெரிவித்தார். இதையடுத்து வடிவேலு வீட்டு அருகே மப்டிபோலீசார் நிறுத்தப்பட்டனர்.
மாலை 5 மணிக்கு வாலிபர் ஒருவர் சைக்கிளில் வடிவேலு வீட்டுக்கு வந்து, வீட்டு காம்பவுண்டுக்குள் ஒரு தாளைபோட்டு விட்டு ஓட முயற்சித்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் வீசிய தாளில், ரூ.5 லட்சம்பணத்துடன் வராவிட்டால், காலை 10 மணிக்கு குண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டு இருந்தது.
போலீஸ் விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் அய்யன்பாண்டி (20) என்றும், சிவகங்கை மாவட்டம்வெள்ளிக்குறிச்சி என்ற ஊரைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. சினிமா ஆசையில் சென்னை வந்த அவர்,இங்கு தச்சு வேலை பார்த்து வந்திருக்கிறார். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்பி, வடிவேலுவுக்கு மிரட்டல்கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யாராவது நடிகர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை என்று வடிவேலுகூறியுள்ளார். வடிவேலுவுக்கும் கோடம்பாக்கத்தில் பல குட்டி, பெரிய காமெடி நடிகர்களுக்கும் ஏழாம் பொருத்தம்என்பது குறிப்பிடத்தக்கது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications