வள்ளுவர் சிலைக்கு ரூ. 27 லட்சத்தில் வேதிப் பூச்சு
சென்னை:
கன்னியாகுமரி கடல் பாறை மீது நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரூ. 27.73 லட்சம் செலவில் பாலி சிலிக்கான் என்ற வேதிப்பொருள் பூசப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
குமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு அருகே உள்ள பாறையில் திருவள்ளுவரின் 133 அடி கம்பீர சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச்சிலை திமுக ஆட்சியில் நிறுவப்பட்டதால், அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அதை முறையாகப் பராமரிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
கடல் உப்புக் காற்றினால் சிலைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், எனவே வேதிப் பொருள் பூசப்பட வேண்டும் என்றும் திமுக தலைவர்கருணாநிதி, சிலையை உருவாக்கிய கணபதி ஸ்தபதி உள்ளிட்டார் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந் நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு ரூ. 27.73 லட்சம் மதிப்பில் பாலி சிலிக்கான் என்ற வேதிப் பொருளை பூசவுள்ளதாக தமிழக அரசுஅறிவித்துள்ளது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இந்தப் பணியை மேற்கொள்ளவுள்ளது.
ஆகஸ்ட் 22ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை வேதிப்பொருள் பூசும் பணி நடைபெறும். இந்த கால கட்டத்தில் சிலைக்கு அருகேசெல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
-
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications