ஜெயலட்சுமி... வாக்குமூலம்
மதுரை
தென் மாவட்ட காவல்துறையையே தனது முந்தானைக்குள் வைத்திருந்த சிவகாசி பெண்மணி ஜயலட்சுமி இன்றுகாலை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜரானார்.
அவரிடம் பிற்பகலில் வாக்குமூலம் கேட்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர். ஆனால், வாக்குமூலம் தரஜெயலட்சுமி 2 நாள் அவகாசம் கேட்க முடிவு செய்துள்ளார்.
இன்று காலை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் காலையில் அவர் ஆஜரானார். அப்போது நீதிபதிகள்பாலசுப்ரமணியன், மாசிலாமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அவரிடம் விசாரணை நடத்தியது. பின்னர்பிற்பகலில நீதிபதி பாலசுப்ரமணியம் அறையில் ஆஜராகுமாறு ஜெயலட்சுமிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிற்பகலில் ஜெயலட்சுமி நீதிபதி அறையில் ஆஜராகும்போது வாக்குமூலம் தர 2 நாள் அவகாசம் கேட்க முடிவுசெய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் அழகிசாமி கூறியுள்ளார்.
மேலும், தன்னிடம் மோசடி செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதிகளிடம்ஜெயலட்சுமி கோரிக்கை வைப்பார் என்றார் அழகிசாமி.
வாக்குமூலம் தரப்போகும் ஜெயலட்சுமி, அப்போது வெளியிடப்போகும் காவல்துறையினரின் பெயர்களைஅறிவதற்காக தமிழகமே மிகுந்த ஆவலுடன் காத்துள்ளது.
இதுவரை 20 பேரை கல்யாணம் செய்துள்ளதாகவும், எஸ்.பி. முதல் சாதாரண ஏட்டு வரை தனது கருப்புக்கவர்ச்சியால் வளைத்துப் போட்டு பல விஷயங்களை சாதித்துள்ளதாகக் கூறப்படும் ஜெயலட்சுமி தற்போதுஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலட்சுமி விவகாரத்தையடுத்து நாறிப் போயுள்ள தென் மாவட்ட காவல்துறையின் இமேஜ் அவரதுவாக்குமூலத்திற்குப் பிறகு இன்னும் மோசம் என்று தெரிகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications