கூடியது நாடாளுமன்றம்; வெளிநடப்பு
டெல்லி:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. ராஜ்யசபாவில் ஆளும்கூட்டணிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய அமைச்சர்கள் விவகாரத்தை பா.ஜ.க. கிளப்ப, அதற்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பதில் தர பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல்போகவே அவையை தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் ஒத்தி வைத்தார்.
மக்களவையிலும் இந்த விவகாரம் கிளப்பப்பட்டது. ஆனால், கேள்வி நேரத்துக்குப் பின் அது குறித்துப் பேசலாம்என சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியதால், அவை நடவடிக்கைகளை எதிர்க் கட்சிகள் நிறுத்தவில்லை.
இந்த பட்ஜெட் கூட்டம் செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும்.
கடந்த மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ப.சிதம்பரம். அதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தின்பெரும்பாலான நாட்கள் அவையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எதிர்க் கட்சிகளின் தர்ணா,போராட்டம் காரணமாக அவை ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் சுமார் 10 நாள் இடைவெளிக்குப் பின் இன்று மீண்டும் அவை கூடியது.. இக் கூட்டத் தொடரில்பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, சங் பரிவார் குறித்து மனித வள மேம்பாட்டுத் துறைஅமைச்சர் அர்ஜூன் சிங் தாக்கிப் பேசியது ஆகியவை குறித்தும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணிக் கட்சிகள் பிரச்சினையை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இராக்கில் பிணைக் கைதிகளாக உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு எடுத்து வரும்நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications