இந்தியர் குடும்பத்துடன் குவைத் நிறுவனம் பேச்சு
குவைத்:
இராக் தீவிரவாதிகள் வசமுள்ள பிணைக்கைதிகளை மீட்க முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,எனவே பிணைக்கைதி அந்தர்யாமியின் பெற்றோர்கள் தங்களது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்என்றும் குவைத் லாரி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக குவைத் மற்றும் கல்ப் லிங்க் போக்குவரத்து நிறுவனம் அந்தர்யாமியின் பெற்றோரைதொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது. இச் செய்தியை, அந் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ராணாஅபு சைனே நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
பிணைக் கைதிகளை பத்திரமாக விடுவிக்க நாங்கள் முழு முயற்சிகள் எடுத்து வருவதாக அந்தர்யாமியின்பெற்றோரிடமும், உறவினர்களிடமும் உறுதி தெரிவித்தோம்.
எங்களை நம்புமாறும், எங்களது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும் அவர்களிடம் கேட்டுக் கொண்டோம்.மேலும் அவர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டோம்.
இந்த உண்ணாவிரதத்தால் அவர்களது உடல் நலம் பாதிக்கப்படும் என்றும், விடுதலைக்குப் பின் அவர்களைப்பார்க்க வரும் அந்தர்யாமி அதை விரும்ப மாட்டார் என்றும் கூறினோம்.
பேச்சுவார்த்தை முறிந்ததையடுத்து தீவிரவாதிகளுடன் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை. பலூஜா நகரில்நிலைமை மோசமாக உள்ளது. இது எங்களது முயற்சிகளில் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும்,இந்தப் பிரச்சினையில் சுமூகமான தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம் என்றார்.
தீவிரவாதிகள் மேலும் ஒரு புதிய நிபந்தனையை விதித்ததையடுத்து, கடந்த 7ம் தேதி பேச்சுவார்த்தையிலிருந்துகுவைத் நிறுவனம் விலகியுள்ளது. தீவிரவாதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும்தெரிவித்தது.
இதனையடுத்து கடந்த 10 நாட்களாக பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications