மாறன் தபால் தலை: சென்னையில் சோனியா
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு தபால் தலையை வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சென்னை வந்தார்.
மாறன் நினைவாக மத்திய தகவல் தொடர்புத் துறை இந்த தபால் தலையை வெளியிடுகிறது. இந்தத் துறையின்அமைச்சராக இருப்பது மாறனின் மகன் தயாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை சென்னை வந்த சோனியா காந்தி, கோபாலபுரத்தில் உள்ள முரசொலி மாறனின் இல்லத்துக்குச் சென்றுஅவரது மனைவியைச் சந்தித்துப் பேசினார். 35 நிமிடங்கள் நடந்த இச் சந்திப்பின்போது திமுக தலைவர்கருணாநிதியும் உடனிருந்தார்.
இதைத் தொடர்ந்து மாறன் நினைவு தபால் தலையை வெளியிட அண்ணா அறிவாலயத்துக்கு சோனியாவும்,கருணாநிதியும் புறப்பட்டுச் சென்றனர்.
தபால் தலையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட, தபால் உறையை மக்களவை சபாநாயகர்சோம்நாத் சாட்டர்ஜி வெளியிடுகிறார். திமுக தலைவர் கருணாநிதி பெற்றுக் கொள்கிறார்.
முன்னதாக இன்று காலை முரசொலி பத்திரிக்கை அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மாறனின் சிலையைகருணாநிதி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், பன்முகம் கொண்டிருந்த முரசொலி மாறன் சிறந்த பத்திரிக்கையாளராகவும்திகழ்ந்தார். வெறும் பத்திரிக்கையாளராக மட்டுமல்லாது நல்ல பகுத்தறிவாளராகவும் விளங்கினார் என்றுமுரசொலி மாறனுக்குப் புகழாரம் சூட்டினார்.
சிலை திறப்பு நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, முரசொலி மாறனின் மகன் தயாநிதிமாறன், மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயண ராவ்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க, மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, தமிழக காங்கிரஸ்பொறுப்பாளர் சல்மான் குர்ஷித் ஆகியோரும் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசிய சாட்டர்ஜி,
மாறன் எனது நீண்ட கால நண்பர், அவரது தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமைகொள்கிறேன். மக்களவை வரைமுறைகளுக்கு உட்பட்டு அவையை நான் நடத்துகிறேன். எல்லா விவாதங்களிலும்அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் பேச அனுமதியளித்து வருகிறேன் என்றார்.
மத்தியில் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ் பதவியேற்ற பின் சோனியா காந்தி சென்னைவருவது இதுவே முதல் முறையாகும். இதனால் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து கோஷ்டிகளும்தடபுடலான வரவேற்பு வழங்கினர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications