பிரபாகரனை சந்திக்கத் தயார்: சந்திரிகா
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசத் தயாராக இருப்பதாக இலங்கைஅதிபர் சந்திரிகா குமாரதுங்கா அறிவித்துள்ளார்.
தங்கள் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைக்க சந்திரிகா ஒப்புக் கொண்டால் மட்டுமேதடைபட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க முடியும் என புலிகள் திட்டவட்டமாகஅறிவித்துள்ளனர்.
இந் நிலையில் அமெரிக்க செய்தி நிறுவனமான யுபிஐக்கு சந்திரிகா அளித்துள்ள பேட்டியில்,
புலிகளுடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதற்கான சூழலை உருவாக்கவேண்டியது புலிகள் தான். புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்கவும் அவருடன் பேச்சுநடத்தவும் நான் தயாராக இருக்கிறேன்.
அச் சந்திப்பு பலனுள்ளதாக இருக்க வேண்டும். வெறும் கைகுலுக்கல்களுடன் முடிந்துவிடக் கூடாது.தடைபட்டுள்ள பேச்சுவார்த்தைகள் அதற்கு முன்னதாகவே தொடங்க வேண்டும் என்றுவிரும்புகிறேன்.
அதே நேரத்தில் அதிபர் என்ற முறையில் எனது அதிகாரத்தைப் பயன்படுத்த தயங்க மாட்டேன்.இலங்கையின் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டால் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள இருமாகாணங்களுக்கும் ராணுவத்தை அனுப்பவும் தயங்க மாட்டோம்.
கருணாவுடனான மோதலால் கிழக்குப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. அப்போதுராணுவத்தை அனுப்ப நான் முன் வந்தேன். ஆனால், எங்கள் உதவி தேவையில்லை என்று புலிகள்நிராகரித்துவுட்டனர் என்றார் சந்திரிகா.
இந் நிலையில் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திய பின் நிருபர்களிடம் பேசியபுலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன்,
எங்களைச் சந்திக்கும் சர்வதேச பிரதிநிதிகள் யாரும் உடனே அமைதிப் பேச்சுவார்த்தைகளைத்தொடங்குமாறு நிர்பந்திக்கவில்லை.
இலங்கை அரசியலில் நடக்கும் அதிகாரப் போட்டியால் தான் அமைதிப் பேச்சுக்கள்தடைபட்டுள்ளன. அதற்கு நாங்கள் எந்த வகையிலும் காரணமல்ல. இடைக்கால நிர்வாகத்தை முன்வைத்து பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
உடனே பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஆர்வத்துடன் இருக்கிறோம். ஆனால், அமைதிமுயற்சிகளை சீர்குலைக்கும் வேலைகளில் ஈபிடிபியும் கருணா கும்பலும் ஈடுபட்டுள்ளன என்றார்.
இதற்கிடையே ஈபிடிபியின் பிரச்சாரக் குழுச் செயலாளரான பாலானந்தராஜாவை (ஈரோஸ் பாலா)கொழும்பில் அடையாளம் தெரியாத சிலர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications