தமிழுக்காக ஒன்று சேர்ந்த ராமதாஸ், திருமாவளவன்
சென்னை:
அரசியல் வானில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் பாமக நிறுவனர் ராமதாசும், விடுதலை சிறுத்தைகள்அமைப்பின் பொது செயலாளர் திருமாவளவனும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் நடத்திய கருத்தரங்கில் ஒன்றாகக்கலந்து கொண்டனர்.
தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று தமிழ் பாதுகாப்பு கருத்தரங்கு, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடந்தது. கருத்தரங்கில் ராமதாஸ், திருமாவளவன், பாமக தலைவர் ஜி.கே. மணி,மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், சினிமா இயக்குநர் தங்கர்பச்சான், கவிஞர் அறிவுமதி,ஓவியர் புகழேந்தி, ஈரோடு தமிழன்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ராமதாசும் திருமாவளவனும் ஒருவருக்கு ஒருவர் பொன்னாடை போர்த்திக் கொண்டனர்.
ராமதாஸ் பேசும்போது கூறியதாவது:
திருமாவளவன் எனது தம்பி. நான் அவரை விமர்சித்தது இல்லை. அவர் பலமுறை என்னைப்பற்றி பேசிஇருக்கிறார். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நான் அரசியலை தூக்கி வைத்து விட்டு, தமிழுக்காக இங்கு வந்திருக்கிறேன். தமிழர்கள் என்ற உணர்வால் நாங்கள்ஒன்று சேர்ந்து இருக்கிறோம். எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.
நாங்கள் தமிழ் அன்னையின் தவப்புதல்வர்கள் என்று பேசினார்.
திருமாவளவன் பேசும்போது,
நாங்கள் மேடை விளம்பரத்துக்காகவோ, அரசியல் லாபத்துக்காகவோ ஒன்று சேரவில்லை. எங்களுக்குள்எத்தனையோ கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் தமிழ் மக்களுக்காக இங்கு நாங்கள் ஒன்றுசேர்ந்திருக்கிறோம். தமிழுக்காக நாங்கள் இணைந்திருப்பது என்றும் நீடிக்கும் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications