சின்னதம்பி நடிகர் உதய பிரகாஷ் சாவு
சென்னை:
சின்னத்தம்பி படத்தில் குஷ்புவின் இரண்டாவது அண்ணனாக நடித்த உதய பிரகாஷ், மர்மமான முறையில்இறந்து கிடந்தார்.
சின்னதம்பி, மன்னன், கட்டபொம்மன் உள்பட பல படங்களில் உதய பிரகாஷ் வில்லன் வேடத்தில்நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக சினிமா வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில், மிகுந்த பணக் கஷ்டத்தில்இருந்தார்.
நண்பர்கள், உறவினர்கள் கைவிட்ட நிலையில், சேலம் அருகே உள்ள கிராமத்தில் ஒரு பெண்ணின் ஆதரவில்வாழ்ந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. அவரது நிலை குறித்து அறிந்த நடிகர் சரத்குமார் தனது அரசுபடத்தில் நடிக்க வைத்தார்.
ஆனால் அதன் பிறகும் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் மனக்கஷ்டம் அடைந்த அவர் அளவுக்கு அதிகமாககுடித்து ரோட்டு ஓரங்களிலும் விழுந்து கிடந்தார். இந் நிலையில் ஆஸ்துமாவாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காகமருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இன்று காலை நடிகர் சங்கம் அருகில் ரோட்டில் உதய பிரகாஷ் சுயநினைவின்றி விழுந்து கிடந்தார். இதுபற்றிதகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். நடுத்தரவயதினரான உதய பிரகாஷ், ஆஸ்துமா மற்றும் அதிக போதை காரணமாக இறந்திருக்கலாம் என்று போலீஸார்கருதுகின்றனர்.
அவரது உடல் சொந்த ஊரான ஊட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர் நெப்போலியன்அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவுக்கு சின்னதம்பி பட இயக்குனர் வாசு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மணிகண்டன் என்ற உதயபிரகாஷ் சட்டம் படித்தவர். சினிமா ஆசையால் சென்னை வந்து நியாயத் தராசு படத்தில்வில்லனாக அறிமுகமானார்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications