குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் முகம்மது அலி
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் சிபிசிஐடிடிஐஜி முகம்மது அலி மறுத்துள்ளார்.
இந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளஅலியின் ஜாமீன் மனுக்கள் இரு முறை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
இந் நிலையில் முதன்மை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்த அலிதானே நேரில் ஆஜராகி கூறியதாவது:
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிஜாமுதீனோ, அவரது மனைவியோ அல்லது பாலாஜியோஎனக்குப் பணம் தந்ததாக கூறவே இல்லை. அவர்களிடம் இருந்து நான் ரூ. 8 லட்சம் வாங்கியதாகசொல்லும் புகார் தவறானது.
இந்த வழக்கில் நான் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டுள்ளேன். முத்திரைத் தாள் மோசடியைநான் முறையாகத் தான் விசாரித்தேன்.
அதே போல சிபிசிஐடி அலுவலகத்தில் கைப்பற்று வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள போலிமுத்திரைத் தாள்கள் காணாமல் போனதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
நிஜாமுதீன் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் ஆன பின்னரே அதை முறைப்படி நான் பதிவு செய்ததாககூறுகிறார்கள். உண்மையில் 2002ம் ஆண்டு, ஏப்ரல் 22ம் தேதி அவர் கைது செய்யப்பட்டபோதுநான் ஊரிலேயே இல்லை. அப்படி இருக்கையில் அவரது கைது விஷயத்தில் நான் எப்படி எந்தத்தவறும் செய்திருக்க முடியும்?.
இந்த வழக்கில் என்னுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் தரப்பட்டுவிட்டது. ஆனால், நான்கைதாகி 50 நாட்களாக சிறையில் இருந்து வருகிறேன். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரியானநான் வெளியில் வந்தால் எப்படி சாட்சியங்களைக் குலைக்க முடியும்?.
இதனால் என்னை ஜாமீனில் விட வேண்டும் என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமையும்தொடரும் என்று அறிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications