காவிரி நடுவர் மன்றம்: தமிழக வருகை தடை
டெல்லி:
காவிரிப் படுகையில் உள்ள அணைக்கட்டுகள், காவிரிப் பாசனப் பகுதிகளைப் பார்வையிட நடுவர்மன்ற நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் தலைவராக நீதிபதி என்.பி. சிங்கின் உள்ளார். மன்றத்தின்உறுப்பினர்களாக நீதிபதிகள் என்.எஸ்.ராவ், சுதீர் நாராயணன் ஆகியோர் உள்ளனர்.
இந்த உறுப்பினர்கள் இருவரும் வரும் 23ம் தேதி முதல் தமிழக காவிரிப் பாசன பகுதிகளைபார்வையிடப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு நடுவர் மன்றத் தலைவர் சிங்உத்தரவிட்டிருந்ததாக செய்திகள் வந்தன.
ஆனால், மன்ற உறுப்பினர்கள் தன்னையும் மீறி பாசனப் பகுதிகளைப் பார்வையிடவுள்ளதாகவும்,அதைத் தடுக்குமாறும் என்.பி.சிங் முறையிட்டார்.
இதையடுத்து அவர்கள் தமிழகம், கர்நாடகத்தில் காவிரிப் பாசனப் பகுதிகளைப் பார்வையிட உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் 29ம் தேதி வரையும், கர்நாடகத்தில் அடுத்த மாதமும் இவர்கள் ஆய்வு நடத்தத்திட்டமிட்டிருந்தனர்.
இந்த நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைத் தர வேண்டும் எனகர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், அந்தத் தீர்ப்பை கர்நாடகம் மதித்ததே இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
முன்னதாக மன்ற உறுப்பினர்கள் இருவரும் தமிழக, கர்நாடகப் பாசனப் பகுதிகள், அணைகளைபார்வையிட்ட பின் விரைவில் இறுதித் தீர்ப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications