உலகின் 3வது அதிகாரம் வாய்ந்த பெண் சோனியா
நியூயார்க்:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, உலகின் 3வது மிகவும் அதிகார பலம் வாய்ந்தபெண்மணியாக போர்ப்ஸ் இதழ் தேர்வு செய்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம்செலுத்துவோர் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த இதழ் தேர்வுசெய்துள்ள 100 அதிகாரம் மிக்க பெண்மணிகள் குறித்த விவரம்:
அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் காண்டலீஸா ரைஸ் தான் உலகின் அதிகாரம் மிக்க முதல்பெண்மணி. அடுத்த இடத்தில் இருப்பது சீனத் துணை அதிபர் வூ யி.
அதற்கு அடுத்தபடியாக அதிகாரம் கொண்ட பெண்மணி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தான்.இவருக்கு அடுத்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி லாராவும், முன்னாள்அதிபர் கிளின்டனின் மனைவியும் செனட்டருமான ஹில்லாரி கிளிட்டன் ஆகியோரும் உள்ளதாகத்தெரிவித்துள்ளது.
இந்த நூறு பேர் பட்டியலில் இந்தோனேஷிய அதிபர் மேகாவதி சுகர்னோபுத்ரி 8ம் இடத்தையும்,பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியா அரோயோ 9வது இடத்தையும், வங்கதேச அதிபர் கலீதா ஜியா14வது இடத்தையும், இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா 44வது இடத்தையும், மியான்மார்ஜனநாயகப் போராட்டவாதி ஆங் ஷான் சூ கி 45வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
57 வயதான சோனியா காந்தி, பிரதமர் பதவி ஏற்க மறுத்ததன் மூலம் இந்திய மக்களிடையே பெரும்அன்பைப் பெற்றுவிட்டார். இந்தியாவில் இப்போது சோனியைவிட அதிகமாக மதிக்கப்படும் பெண்யாரும் இல்லை என்று போர்ப்ஸ் இதழ் கூறியுள்ளது.
முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் (21வது இடம்), பிரிட்டிஷ் பிரதமர் டோனிபிளேரின் மனைவி செர்ரி (12 வது இடம்), ஜோர்டன் நாட்டு அரசி (13 வது இடம்), பிரிட்டிஷ்அரசி எலிசபெத் (22வது இடம்) ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும்












Click it and Unblock the Notifications