இன்று சென்னை தினம்
சென்னை:
சென்னை நகரம் தோன்றிய வரலாற்றை நினைவு கூறும் வகையில் இன்று சென்னை தினம்கொண்டாடப்பட்டது.
இந்தியாவில் 17ம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்த இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியினர்தங்கள் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்ற இடமாக சென்னை பகுதியை தேர்வு செய்தனர்.
அப்போது சென்னையின் ஒரு பகுதி விஜய நகரப் பேரரசின் கட்டுப்பாட்டிலும், திருவல்லிக்கேணிஉள்ளிட்ட தென் பகுதிகள் கோல்கொண்டா சுல்தானின் கட்டுப்பாட்டிலும் இருந்தன. அப்போதுசென்னை மிகச் சிறிய கடற்கரை கிராமம்.
விஜய நகரப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை பகுதிகளை பூந்தமல்லி வெங்கடாத்ரிநாயக்கர் என்பவர் நிர்வகித்து வந்தார். தனது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு, தனது தந்தையின்பெயரால் அப் பகுதிக்கு சென்னபட்டணம் என்று பெயரிட்டிருந்தார்.
1639ம் ஆண்டில் கப்பல் போக்குவரத்து வர்த்தகத்துக்காக ஒரு வர்த்தக அலுவலகம் அமைப்பதற்காககிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்ஸ் டே மற்றும் ஆன்ட்ரூ கோஹன் ஆகியோர்சென்னபட்டணத்துக்கு வந்து பெரி திம்மப்பா என்பவரை சந்தித்துப் பேசினர்.
அவர்களை வெங்கடாத்ரி நாயக்கரிடம் அழைத்துச் சென்றார் திம்மப்பா. அவர்களுக்குஇப்போதைய கடற்கரைச் சாலையில் ஒரு இடத்தை ஒதுக்கினார் வெங்கடாத்ரி. அந்த இடத்தில்வர்த்தக வளாகத்தையும் கூடவே ஒரு குடியிருப்பையும் நிறுவிய ஆங்கிலேயர்கள், பின்னர் அதைசெயிண்ட் ஜார்ஜ் கோட்டையாக மாற்றினர்.
சென்னபட்டணம் என்ற பெயர் வாயில் நுழையாததால், தாங்கள் வசித்த ஜார்ஜ் கோட்டை பகுதிக்குமெட்ராஸ் என்று பெயரிட்டனர் ஆங்கிலேயர்கள்.
அதே போல சென்னபட்டணத்துக்கு அருகே இருந்த, திருவல்லிக்கேணி கிராமத்தையே ஆண்டுக்குரூ. 175 என்ற கணக்கில் கோல்கொண்டா சுல்தானிடம் இருந்து லீசுக்கு எடுத்தனர் கிழக்கிந்தியகம்பெனியினர். தொடர்ந்து சென்னபட்டணம் என்ற சென்னையின் பல பகுதிகளையும் தங்களதுகட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
சென்னபட்டணம் என்ற பெயர் ஆங்கிலேயர்களின் வாயில் புகுந்து சென்னையாக சுருங்கியது.பின்னர் மெதுவாக அதுவே பெயராகிப் போனது.
தொடர்ந்து மெதுவாக, ஆங்கிலேயர்கள் வசித்த மெட்ராஸ் (ஜார்ஜ் கோட்டை) பகுதியின் பெயரேசென்னபட்டணம் முழுமைக்கும்பெயராகிப் போனது.
மேலே சொன்ன வரலாறு நடந்தேறி கிட்டத்தட்ட 350 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த வரலாற்றுப்பின்னணியில் சென்னை நகரம் தோன்றியது, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் தேதிநினைவுகூறப்படுகிறது.
அந்த வகையில் இன்று சென்னை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையின் 365ஆண்டு கால வரலாற்றை சித்தரிக்கும் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுவருகின்றன.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications