இந்தியா தயாரித்த முதல் பயணிகள் விமானம்: வெற்றிகரமாய் பறந்தது
பெங்களூர்:
இந்தியாவே வடிவமைத்துத் தயாரித்துள்ள முதல் பயணிகள் விமானமான சாரஸ் இன்று காலைவெற்றிகரமாக விண்ணில் பறந்தது.
பெங்களூரில் உள்ள தேசிய விமான ஆராய்ச்சி நிறுவனம் இதனைத் தயாரித்துள்ளது. இன்று காலைபெங்களூரில் நடந்த இதன் சோதனை ஓட்டத்தை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறைஅமைமச்சர் கபில் சிபல், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத் தலைவர் மொகந்தி ஆகியோர்நேரில் பார்வையிட்டனர்.
20 நிமிடங்கள் பெங்களூர் வான் பகுதியில் வெற்றிகரமாகப் பறந்த இந்த விமானம் பத்திரமாகத்தரையிறங்கியது.
14 பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த விமானம் மணிக்கு 620 கி.மீ. வேகத்தில் பறக்கக் கூடியது.7,500 அடி உயரத்தில் பறக்கும் வல்லமை கொண்ட இந்த விமானம் மிகச் சிறிய ரன்வேக்கள்,மோசமான ரன்வேக்களில் கூட டேக் ஆப் மற்றும் தரை இறங்கும் திறன் கொண்டது.
15 மீட்டர் நீளம், 14.7 மீட்டர் அகலம், 5.2 மீட்டர் உயரம் கொண்ட இந்த விமானம் 570 மீட்டர்நீளமான ரன்வேயிலேயே டேக் ஆப் ஆகும் திறன் கொண்டது. தரையிறங்க 605 மீட்டர் நீள ரன்வேபோதும்.
எப்படிப்பட்ட கால நிலையிலும் பறக்கும் இந்த விமானத்தை ஏர் ஆம்புலன்ஸ், உளவுப் பணி உள்படபல தரப்பட்ட பணிகளுக்கும் பயன்படுத்த முடியும்.












Click it and Unblock the Notifications