கும்பகோணம்: அனுமதியின்றி வந்த ஹெலிகாப்டர்
கும்பகோணம்:
கும்பகோணம் அரசுக் கல்லூரி மைதானத்தில் அனுமதியில்லாமல், திடீரென ஒரு ஹெலிகாப்டர்தரையிறங்கி பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரைச் சேர்ந்த அனிதா, திவான் ஆகியோர் ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் கோவிலுக்குச்செல்ல ஹெலிகாப்டரில் கும்பகோணம் வரத் திட்டமிட்டனர்.
இதற்காக பெங்களூரைச் சேர்ந்த டெக்கான் ஏர் நிறுவன ஹெலிகாப்டரை ரூ. 1.5 லட்சத்துக்குவாடகைக்கு அமர்த்தினர். இதையடுத்து ஹெலிகாப்டரை கும்பகோணம் கல்லூரியில் தரையிறக்கஅந்த நிறுவனம் மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பியது.
ஆனால், அந்த அனுமதி தரப்படவில்லை. அனுமதி மறுக்கப்பட்ட விவரம் பேக்ஸ் மூலம்ஹெலிகாப்டர் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது.
இந் நிலையில் காலை 9.40 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் திடீரென அரசு கல்லூரி மைதானத்தில்வந்திறங்கியது. அதில் வந்த திவான், அனிதா ஆகியோர் காரில் திருநாகேஸ்வரம் புறப்பட்டுச்சென்றனர்.
அனுமதியில்லாமல் ஹெலிகாப்டர் கல்லூரியில் இறங்கிய விவரம் தெரியவந்ததும் அதிகாரிகளும்போலீசாரும் அறங்கு விரைந்தனர். பைலட்டிடம் அவர்கள் விசாரணை நடத்தியபோது, அனுமதிமறுக்கப்பட்ட பேக்ஸ் கடிதம் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றார்.
இதற்கிடையே திருநாகேஸ்வரம் சென்று திரும்பிய திவான் மற்றும் அனிதா ஆகியோர்அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினர்.
முதலில் பிற்பகலில் கும்பகோணம் வரத் திட்டமிட்டிருந்த அவர்கள், காலையிலேயேவந்துவிட்டதாகவும், இந்த இடைவெளியில் தான் அனுமதி மறுக்கப்பட்ட பேக்ஸ் கடிதம்பெங்களூருக்கு அனுப்பப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து பைலட் மற்றும் அதில் வந்தவர்களிடம் விளக்கக் கடிதத்தை வாங்கிக் கொண்டுஹெலிகாப்டர் மீண்டும் பெங்களூர் செல்ல அதிகாரிகள் அனுமதி தந்தனர்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications