அய்யர்- பால் தாக்கரேவுக்கு கருணாநிதி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மறைந்த தலைவர்களை யாரும் விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

வீர் சாவர்க்கர், முகம்மது அலி ஜின்னா ஆகியோர் குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யர்கூறிய சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் நாடாளுமன்றம் ஸ்தம்பித்துள்ளது. அத்தோடு பாஜக. சிவசேனை,ஆர்எஸ்எஸ் ஆகியவை நாடு தழுவிய போராட்டத்தில் குதித்துள்ளன.

இந் நிலையில் இன்று ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கூட்டம் சென்னையில் கருணாநிதியின் தலைமையில்நடந்தது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லக்கண்ணு, காங்கிரஸ் கட்சியின்சார்பில் எஸ்.ஜி. விநயாகமூர்த்தி, இந்திய தேசிய யூனியன் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுத்து வரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கட்சிகளைக் கண்டித்து செப்டம்பர் 7ம் தேதி கண்டனப் பொதுக் கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும் 7ம் தேதி காலை ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மத்தியில் அமைச்சர் பொறுப்புவகிப்போர், எம்.பிக்கள் ஆகியோரின் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டணிக் கட்சியினருடான கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,

சாவர்க்கர், தான் சரி என்று நம்பிய சில கொள்கைகளுக்காகப் போராடினார். அதில் கருத்து வேறுபாடுகள்இருக்கலாம். ஆனால், இப்போது அவர் உயிருடன் இல்லை. இந் நிலையில் அவரை யார் விமர்சித்தாலும் தவறுதான்.

அதே போல சாவர்க்கரும் முகமது அலி ஜின்னாவும் ஒன்று தான், இருவரும் தான் நாடு பிளவுபடக் காரணமாகஇருந்தனர் என்று மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர் பேசிய கடும் கன்டனத்துகுரியது. அய்யரின் அந்தவிமர்சனம் ஏற்கவே முடியாதது.

சுதந்திரப் போராட்டதின் அப்போதைய கால கட்டத்தில் நிலவிய சூழ்நிலைகளையும், அதனால் இந்தியா,பாகிஸ்தான் என நாடு இரண்டானதன் காரணத்தையும் சரியாக உணர்ந்தவர்கள் யாரும் அய்யரின் விமர்சனத்தைஏற்கவே மாட்டார்கள்.

இது போன்ற விமர்சனங்கள் சாவர்க்கரையும் ஜின்னாவையும் மதித்தவர்களின் மனதைப் புண்படுத்தத் தான்உதவுமே தவிர, இதனால் வேறு எந்தப் பயனும் ஏற்படாது. மேலும் இருவருமே மறைந்துவிட்ட தலைவர்கள்.அவர்களை இப்போது விமர்சிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

அதே நேரத்தில் அய்யருக்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறி, அவரது உருவ பொம்மையை செருப்பால் அடித்துபோராட்டம் நடத்திய சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவின் செயல் அநாகரீகமானது மட்டுமல்லகாட்டுமிரான்டித்தனமானது என்றார் கருணாநிதி.

கவர்னர்கள் இட மாற்றத்துக்கு எதிரான வழக்கில் அதிமுக தன்னையும் சேர்த்துக் கொள்ளச் சொல்லி மனுசெய்துள்ளதே என்று கேட்டபோது, அந்த விவகாரத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை என்றார்.

போலீஸ் அதிகாரிகள் ஜெயலட்சுமி தொடர்பு குறித்துக் கேட்டபோது, முதலில் ஜனனி இப்போது ஜெயலட்சுமி..ஒவ்வொன்றாய் பல விஷயங்கள் வெளியில் வருகின்றன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+