பெங்களூரில் 68 தமிழ்ப் பட திரையரங்குகள் மூடல்
பெங்களூர்:
கர்நாடகத்தில் தமிழ் உள்ளிட்ட புதிய பிற மொழிப் படங்களை உடனடியாக ரிலீஸ் செய்யவிதிக்கப்பட்டுள்ள தடையைக் கண்டித்து பெங்களூரில் உள்ள 68 திரையங்குகள் இன்று முதல்மூடப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை தமிழ், ஆங்கிலப் படங்களைத் திரையிடும் தியேட்டர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. தமிழ்ப் படங்களை வெளியிடாவிட்டால் தியேட்டர் நடத்துவதே கஷ்டம்என்பதால் இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வந்துள்ளனர்.
கன்னடம் தவிர்த்து பிற மொழிப் படங்கள் அந்தந்த மாநிலங்களில் ரிலீஸ் செய்யப்பட்ட 7 வாரம்கழித்தே கர்நாடகத்தில் திரையிட வேண்டும் என நடிகர் ராஜ்குமார் தலைமையில் போராட்டம்நடத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கைக்கு கர்நாடக அரசு பணிந்துள்ளது. இதனால் தமிழ் உள்பட பிற மொழிப்படங்களை வெளியிட முடியாமல் வினியோகஸ்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில திரையங்குகள் தடையையும் மீறி தமிழ்ப் படங்களை வெளியிட்டன. ஆனால், பாதுகாப்புபிரச்சனை வந்ததையடுத்து அவை எடுக்கப்பட்டுவிட்டன.
இந் நிலையில் 7 வாரத்துக்கு முன் வந்த தமிழ்ப் படங்கள் அல்லது கன்னடப் படங்களை மட்டுமேதிரையிட வேண்டிய நிலைமைக்கு தியேட்டர் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கன்னடப் படங்களைத் திரையிட்டால் தியேட்டர்களில் ஆபரேட்டர் மட்டுமே இருப்பார், படம்பார்க்க யாரும் வர மாட்டார்கள் என்ற சூழல். இதையடுத்து தியேட்டர்களை மூடிவிடுவதேநஷ்டத்தைத் தவிர்க்க ஒரே வழி என்ற நிலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் உள்ளனர்.
இந் நிலையில் பெங்களூரில் உள்ள 68 தியேட்டர்களை இன்று முதல் காலவரையின்றி மூடிவிடுவதுஎன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழ், தெலுங்கு, ஆங்கில, இந்திப் படங்களை திரையிடஅனுமதித்தால் மட்டுமே தியேட்டர்களைத் திறப்போம் என உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே புதிய இந்திப் படங்களின் ரிலீசுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பிரதமர்மன்மோகன் சிங்கிடம் இந்தித் திரையுலகினர் மனு கொடுத்துள்ளனர்.
பெங்களூரில் மொத்தமுள்ள 115 திரையரங்குகளில் 75 திரையரங்குகள் பிற மொழிப் படங்களைமட்டுமே திரையிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications