கோவையில் கோவில் கூரை இடிந்து 6 பேர் பலி
கோவை:
கோவையில் கோவில் தூண்கள் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 24பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கோவை பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி என்ற இடத்தில் மகாலட்சுமி கோவில் உள்ளது. இங்குள்ள 15 அடிஉயர ஆஞ்சநேயர் சிலைக்கு மேலே 40 அடி உயரத்தில் நான்கு காண்க்ரீட் தூண்கள், கான்க்ரீட் கூரை அமைக்கும்பணியில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென இரண்டு தூண்கள் இடிந்து விழுந்தன. இதனால் கான்க்ரீட் மேல்தளமும் அப்படியே நொறுங்கிஊழியர்கள் மீது விழுந்து அவர்களை அழுத்தியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் கான்க்ரீட் குவியலுக்குள்சிக்கிக் கொண்டவர்களை மீட்க முயன்றனர். அது முடியாமல் போகவே தீயணைப்புப் படைக்குத் தகவல்தரப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். சிமெண்ட் கலவையில்சிக்கி படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 23 பேர் பத்திரமாக மீட்டு மருத்துவமனைகளுக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இவர்களில் நேற்றிரவு 11.30 மணி வரை 4 பேரின்உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன. அவர்களில் இருவரது பெயர்கள் வேலுச்சாமி, ஜான்சன் என்பது தெரியவந்துள்ளது.
இந் நிலையில் நள்ளிரவில் மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
சம்பவம் நடந்த கோவிலை அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன் ஆகியோர் பார்வையிட்டனர்.இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000ம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 15,000 நிதியும்,லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 6,000மும் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கட்டட பொறியாளரும், காண்ட்ராக்டரும், கோவில் நிர்வாகிகள் 5 பேரூம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மாவட்ட வளர்ச்சி அதிகாரியின் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications