திமுகவின் சவாலை எதிர்கொள்ளத் தயார்: பாஜக
சென்னை:
திமுகவின் எத்தகையை எதிர்ப்பையும் பாஜக எதிர்கொள்வது என அக் கட்சியின் தமிழக நிர்வாகிகள் கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், அகில இந்தியபொதுச் செயலர் இல.கணேசன், மாநில செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எச்.ராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 30-ம் தேதி நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் தேர்தல் தோல்வி காரணமாகவேநாடாளுமன்றத்தில் பாஜக குழப்பம் விளைவிப்பதாகவும், இதைக் கண்டித்து சென்னையில் வருகிற 7-ம் தேதிபொதுக் கூட்டம் நடத்தப் போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுக இருந்தபோது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர்ந்து 14நாள்களுக்கு நாடாளுமன்றத்தை இயங்க விடாமல் பாதிப்பு ஏற்படுத்தினர். அப்போது அவர்களை எதிர்த்து திமுகஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை?
திமுக-வின் இந்த இரட்டை வேடத்தை பாஜக மக்களிடம் எடுத்துரைக்கும். மேலும், கடந்த 3 ஆண்டுகளாக திமுகதலைவர் கருணாநிதி ஒரு நாள் கூட சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பாஜக-வின்நடவடிக்கைகளை விமர்சிக்க எந்த வித தார்மிக உரிமையும் இல்லை.
பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் முன்பு, சட்டசபைக்கு செல்லாததற்கு மக்களிடம் கருணாநிதி மன்னிப்புகேட்டுவிட்டு, இனி தொடர்ந்து சட்டசபைக் கூட்டங்களில் கலந்து கொள்வேன் என்று உறுதி கூற வேண்டும்.
திமுக-வின் பாஜக எதிர்ப்பு, தன்னுடைய கூட்டணிக் கட்சிகளைச் சிதறவிடாமல் பாதுகாத்துக் கொள்ளமேற்கொள்ளப்படும் நடவடிக்கை. அக்கட்சியின் எதிர்ப்பை எதிர்கொள்ள பாஜக தயார் என்று கூறியுள்ளார்.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications