2 தொகுதிகளில் போட்டி: ஆணையம் கிடுக்கிப்பிடி
ஹைதராபாத்:
2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்தால் அந்ததொகுதியில் தேர்தலை நடத்த 10 லட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக வசூலிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரதேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்திநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபடுவது நீண்ட நாள் பிரச்சினையாக உள்ளது. இதை தவிர்க்க ஆன்லைனில்வாக்காளர்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும்
தலைமை தேர்தல் ஆணையத்துக்கு என தனி இணையதளம் உள்ளது. அதில் சென்று வாக்காளர் பெயர்சேர்ப்புக்கான விண்ணப்பத்தில் "ஆன்லைன்" முறையில் பெயர்களை சேர்க்கலாம் அதற்கு உடனடியாக அத்தாட்சிரசீதும் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தலைமை தேர்தல் ஆணையம் அந்தந்த பகுதி தபால் நிலையங்களுக்குஅனுப்பி வைக்கும். தபால் ஊழியர்கள் விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு சென்று பெயர் விபரத்தை சரிபார்ப்பார்கள். அதன்பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும்.
இத் திட்டம் சோதனை முயற்சியாக மகாராஷ்டிராவில் நடத்தப்பட்டது. அதற்கு நல்ல வெற்றி கிடைத்தது. விரைவில்நாடு முழுவதும் இத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
மேலும் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் வாக்காளர் பெயர் சேர்ப்புக்காக தனி அலுவலகங்களைத் தொடங்கதேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
பார்வையற்றவர்கள் பிரெய்லி முறைப்படி வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்குபரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு ஏதாவதுஒரு தொகுதியை ராஜினாமா செய்தால் அந்த தொகுதியில் தேர்தலை நடத்த ராஜினாமா செய்த வேட்பாளர் 10லட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக தரவேண்டும். சட்டசபை தொகுதி என்றால் வேட்பாளர்கள் ரூ.5 லட்சம் நஷ்டஈடுதரவேண்டும்.
5 ஆண்டு மற்றும் அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடும் தகுதியை தானாகவே இழந்துவிடுவார்கள். தேர்தல் தேதி வெளியாவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு எந்த நீதிமன்றத்திலாவது ஒருவர்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்ஆவார்.
ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் கட்டுப்படுத்தப்படும். தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்கவேண்டும். தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் ஒருவருக்கும் வாக்களிக்க பிடிக்கவில்லை என்பதைப்பதிவு செய்யும் அளிக்கப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட 22 அம்சங்கள் கொண்ட பட்டியல் மத்திய அரசுக்குஅனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications