திமுகவுக்கே முழு பொறுப்பு உண்டு: ஜெ
சென்னை:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை தாமதப்படுத்தும் முயற்சியாக கர்நாடக அனைத்துக் கட்சியினர் நடந்துகொள்வதைத் தடுத்து, தமிழகத்திற்குரிய நீரைப் பெற்றுத் தர வேண்டிய முழுப் பொறுப்பும் திமுக தலைமையிலானகூட்டணிக் கட்சிகளுக்கே உண்டு என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று கர்நாடக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளதற்கும் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியிலும், கர்நாடகத்திலும் திமுக முக்கியக் கட்சியாக இடம் பெற்றுள்ளகூட்டணியின் ஆட்சியே நடந்து வருகிறது. எனவே கர்நாடக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில்நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை தடுத்து நிறுத்தி தமிழகத்திற்குரிய நீரைப் பெற்றுத் தர வேண்டிய மிகப் பெரியபொறுப்பு திமுக கூட்டணிக கட்சிகளுக்கு உண்டு.
இந்தக் கடமையிலிருந்து திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் தவறினால், காவிரிப் பாசனப் பகுதிவிவசாயிகள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை ஒருபோதும் மதிக்காத கர்நாடக அரசு, இப்போது இறுதித் தீர்ப்பைதாமதப்படுத்தி தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் நோக்கத்துடன், நடுவர் மன்றத்தைக் கலைக்கவேண்டும் என்று கோரியுள்ளது. இதைத் தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
இவ்வாறு முதல்வர் ஜெயலிலதா கூறியுள்ளார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications