ஜெயலட்சுமி: ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு
சிவகாசி:
சிவகாசி ஜெயலட்சுமியின் குடும்பத்தினரை கடத்த இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்ஷாஜகானால் பயன்படுத்தப்பட்ட காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். காரின் ஓட்டுனரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கில்லாடிப் பெண் ஜெயலட்சுமியின் குடும்பத்தினரை போலீஸார் கடத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில்,இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன், நகைப்பட்டறை அதிபர் முருகவேல்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஒரு திருப்பமாக, ஜெயலட்சுமியின் குடும்பத்தினரைக் கடத்தப் பயன்படுத்த காரின் ஓட்டுனர்அழகர் என்பவர் மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் மறைந்திருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிவகாசி போலீஸார் அங்கு சென்று அழகரைக் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர்அழகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிவகாசி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமி இன்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்தார். அதில்தனது குடும்பத்திரைக் கடத்திய 2 போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.மற்றவர்களை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த முழு விவகாரம்குறித்தும் சிபிஐ விசாரணையை அவர் கோரியுள்ளார்.
இதற்கிடையே, ஜெயலட்சுமிக்கு வாடைக்கு வீடு கொடுத்த வீட்டு உரிமையாளர், தன்னை போலீஸார்கொடுமைப்படுத்தியதாக சாத்தூர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலட்சுமி உடுமலைப்பேட்டையில் வசித்தபோது அவருக்கு வாடகைக்கு வீடு கொடுத்தவர் சேதுராஜ். இவர்சாத்தூரில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கொடுத்த வாக்குமூலம்:
பொள்ளாச்சியில் உள்ள அருள்ஜோதி லாட்ஜில் நான் வேலை பார்த்து வருகிறேன். இந்த ஆண்டு ஜூன் 27ம் தேதிஅங்கு காவல்துறை அதிகாரிகளான ஷாஜகான், கண்ணன் , முருகவேல், ரவிசங்கர், சண்முகம் ஆகியோர் அங்குவந்து என்னை மிரட்டி, வற்புறுத்தி, ஜெயலட்சுமி தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் எங்களது விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால், எனது வீட்டு பத்திரங்களை பறிமுதல் செய்து விடுவதாகமிரட்டினர். அதன் பின்னர் மதுரை எல்லீஸ் நகரில் உள்ள ஒரு வீட்டுக்குக் கொண்டு சென்று அங்கு வைத்துஎன்னை சித்திரவதை செய்தனர். இதில் எனது மார்பு மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் இளங்கோவன், எதற்காக ஜெயலட்சுமிக்கு வீடு வாடகைக்குக் கொடுத்தாய்என்று கேட்டு அடித்தார். நீ வீடு கொடுத்ததால்தான் ஜெயலட்சுமி என்னை விட்டுச் சென்று விட்டாள் என்று கூறிமிகவும் கோபமாக என்னை அடித்தார் இளங்கோவன் என்று கூறினார் சேதுராஜ்.
ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு:
இதற்கிடையே ஜெயலட்சுமி தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீது இன்று நீதிபதி முருகேசன் விசாரணை நடத்தினார். அப்போது, ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ்கார்பஸ்) மீது தற்போது விசாரணை நடந்து வருகிறது. எனவே இந்த மனு மீதான விசாரணை முடிந்த பிறகே முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு கூற முடியும் என்று சொல்லி தீர்ப்பை ஒத்திவைத்தார்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்












Click it and Unblock the Notifications