கருணாநிதியின் கடமை இது: பாஜக
சென்னை:
கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து திமுக தலைவர் கருணாநிதி குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து தமிழக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றுதமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றுகர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது மத்தியிலும், கர்நாடகத்திலும் காங்கிரஸ் கூட்டணி அரசுதான் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்தகூட்டணியில் திமுக தான் முக்கியக் கட்சியாக உள்ளது. எனவே கர்நாடகத்தின் போக்கைக் கண்டித்து குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து தமிழக விவசாயிகளுக்கு கருணாநிதி உதவியிருப்பார் என்றுஎதிர்பார்த்தோம்.
ஆனால், இதுவரை அத்தகைய நடவடிக்கையில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இறங்கவில்லை. எனவேஇனியாவது சுறுசுறுப்புடன் செயல்பட்டு குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஆகியோரை சந்தித்து தமிழக விவசாயிகளைக் காக்கும் வேலையில் கருணாநிதி ஈடுபட வேண்டும். அந்தக் கடமைஅவருக்கு உண்டு என்றார்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்












Click it and Unblock the Notifications