சட்டியில் இருந்து அடுப்பில் குதித்த மாதிரி...
டெல்லி:
கொதிக்கும் எண்ணெய் சட்டியில் இருந்து தப்பிக்க, அடுப்பில் குதித்த மாதிரி ஆகியிருக்கிறதுதமிழகத்தைச் சேர்ந்த ஒரு கொலையாளியின் கதை.
வீராசாமி என்ற அந்த நபருக்கும் அவரது மனைவிக்கும் 1998ம் ஆண்டு ஜூன் 18ம் தேதிவாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மனைவியை வெட்டிக் கொன்ற வீராசாமி, மனைவியின்உடலை 27 துண்டுகளாக வெட்டினார்.
கூறு போடப்பட்ட உடலின் பாகங்களை தனது வீட்டிலேயே ஒரு அறைக்குள் குழிதோண்டிபுதைத்துவிட்டார். அடுத்த நாள் தானாகவே காவல் நிலையத்துக்குப் போய் கொலையை ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.
இவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வீராசாமிக்குஆயுள் தண்டனை விதித்தது கீழ் கோர்ட். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றதில் மனு செய்தார்வீராசாமி. ஆனால், ஆயுள் தண்டனையை உறுதி செய்துவிட்டது உயர் நீதிமன்றம்.
அதை ஏற்றுக் கொண்டு சும்மா இருந்திருக்க வேண்டும் வீராசாமி. மாறாக, தனது ஆயுள்தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சபர்வால் மற்றும் சேமா ஆகியோர்,
இந்த அளவுக்குக் கொடூரமாக மனைவியைக் கொலை செய்து, உடலை கொஞ்சம் கூட இரக்கமேஇல்லாமல் கண்டந்துண்டமாக வெட்டிய உங்களுக்குத் தரப்பட்ட ஆயுள் தணடனையை ஏன் மரணதண்டனையாக மாற்றக் கூடாது என்று கேட்டு வீராசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் வீராசாமிக்கு ஜாமீன் தரவும் மறுத்துவிட்ட நீதிபதிகள், கீழ் கோர்ட் மற்றும் உயர்நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தங்களிடம்ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டனர்.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications