கிருஷ்ணா நீர்: ஆந்திர முதல்வருக்கு ஜெ. கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணையிலிருந்து உடனடியாககிருஷ்ணா நதி நீரைத் திறந்து விடுமாறு அம் மாநில முதல்வர் ராஜசேகர் ரெட்டிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 54 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு சென்னை நகரில் கடும் குடிநீர்ப் பஞ்சம்நிலவுகிறது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டு போயுள்ளன.

இதனால் நகரில் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிப்பது சாத்தியமில்லாததாகி விட்டது. லாரிகள் மூலமேதற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாயை தமிழக அரசுசெலவிட்டு வருகிறது.

கிருஷ்ணா நதியிலிருந்து ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீரை சென்னைக்கு தருவதற்கு ஒப்பந்தம் ஏற்கனவே அமலில்உள்ளது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்ரீசைலம் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டு சென்னைமக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இலவச சைக்கிள்கள்:

ஆதிதிராவிட மாணவிகளைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைசேர்ந்த மாணவிகளுக்கு 3 லட்சம் இலவச சைக்கிள்களை தமிழக அரசு வழங்கவுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்குப் பின் இத் திட்டத்தை பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி ஜெயலலிதாஉத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக தகுதியான பிளஸ்- 1, பிளஸ்- 2 மாணவிகளின் பட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2.96 லட்சத்து மாணவிகளுக்கு இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்க அரசுமுடிவு செய்துள்ளது.

மீனவர்களுக்கு கூடுதல் அரிசி:

இந் நிலையில், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாத 4 மாதங்களில் அவர்களுக்கு ரேஷனில் கூடுதல் அரிசிவழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடலில் மீன் இனப்பெருக்கம் நடைபெறும் 4 மாதங்களில் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்வதில்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர்,புதுக்கேட்டை, ராமநாதபுரம் ஆகிய 10 கடலோர மாவட்ட மீனவர்கள்இந்த மாதம் முதல் டிசம்பர் வரை 4 மாதங்கள்கடலுக்கு மீன்பிடிக்க செல்லமாட்டார்கள்.

இந்த மாதங்களில் வருமான இழப்பு ஏற்படுவதால், அவர்களுக்கு உதவும் வகையில் கூடுதல் அரிசி வழங்கமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மீனவக் குடும்பங்களுக்குகூடுதலாக 20 கிலோ அரிசி வழங்கப்படும். இதன் மூலம் 1 லட்சம் மீனவர்கள் பயன்பெறுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+