பிரதமருக்கு வைகோ நன்றி
திண்டிவனம்:
சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற ரூ. 2,000 கோடி நிதியை ஒதுக்கியதற்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்குமதிமுக பொதுச் செயலாளர் வைகோ நன்றி தெரிவித்தார்.
நெல்லையிலிருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோ இன்று காலை கிளியனூரிலிருந்துதிண்டிவனம் நோக்கி தனது பயணத்தை தொடங்கினார்.
வழியில் ஓமந்தூர் என்ற இடத்திலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்கைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுவைகோ பேசினார்.
சேது சமுத்திரத் திட்டத்திற்கு ரூ. 2,000 கோடி நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்த வைகோ, காவிரி நடுவர்மன்றத்தைக் கலைக்க முயலும் கர்நாடக அரசைத் தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தார். கர்நாடகத்தின்செயல் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உகந்ததல்ல என்பதால் இதில் மத்திய அரசு தலையிட்டுத் தான் ஆக வேண்டும்என்றார் வைகோ.
இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்துவதாக உறுதியளித்த பிரதமர், வைகோவின் உடல் நிலையையும்கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறுகையில், கடந்த 140 ஆண்டு கால கனவு தற்போது நனவாகவுள்ளது. இந்ததிட்டத்தின் மூலம் தென்னிந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரும் வளர்ச்சியைக் காணும் என்றார்.
முன்னதாக நேற்றிரவு தைலாபுரம் வந்தடைந்த வைகோவை, பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்று, பொன்னாடைபோர்த்தினார். பின்னர் வைகோவுக்கும் அவருடன் நடைபயணம் மேற்கொண்டுள்ளவர்களுக்கும் ராமதாஸ் தனதுதோட்டத்தின் அருகே தேநீர் விருந்தளித்தார்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications