சென்னையில் வரலாறு காணாத வெயில் !
சென்னை:
சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்த ஆகஸ்ட் மாதம்கடும் வெயில் வாட்டி வருகிறது.
அதே போல வேலூர், திருச்சி, மதுரையிலும் கடும் வெயில் வாட்டி வருகிறது.
வெயில் காலம் முடிந்துவிட்ட நிலையிலும் சென்னை நகரிலும் வேலூரிலும் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில்அடித்து வருகிறது. காலை 6 மணிக்கே வெயில் ஆரம்பித்து விடுகிறது. மாலை 4 மணி வரை கடுமையானவெயிலும், அனல் காற்றும் மக்களை வாட்டி, வதக்கி எடுத்து வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் இந்த அளவுக்கு கொடும் வெயில் அடிப்பது இதுவேமுதல் முறையாகும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தென் மேற்குப் பருவக் காற்று வீசி வெப்பத்தைக் குறைக்கும்.
ஆனால் இந்த ஆண்டு தென் மேற்குப் பருவக் காற்றும் மழை தொடங்குவது தாமதமாகி வருகிறது. இதனால் தான்இந்த அளவுக்கு வெயில் கொளுத்துவதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
அதேபோல சென்னை நகரில் கடந்த ஒரு மாதத்தில் வழக்கமாக பெய்திருக்க வேண்டிய 324.7 மி.மீ. மழைஅளவை விட மிக மிக குறைந்த அளவிலான மழையே (155.3 மி.மீ) பெய்துள்ளது.
மே மாதத்தை விட மிகக் கடுமையாக வெயில் அடிப்பதால் சென்னை, திருச்சி, வேலூர் மக்கள் வெறுத்துப்போயுள்ளனர். சென்னையின் நேற்றைய வெப்ப நிலை 38 டிகிரி பாரன்ஹீட். வேலூரில் 39 டிகிரிவெப்பமும் மதுரை, திருச்சியில் 38 டிகிரியும் பதிவாகியுள்ளது.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications