இராக்: 3 பிணைக்கைதிகள் இந்தியா திரும்பினர்
டெல்லி :
இராக் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுபட்ட இந்திய பிணைக் கைதிகள் மூவரும் இன்று காலை டெல்லிவந்து சேர்ந்தனர்.
கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி இராக்கில் உள்ள குவைத் லாரி நிறுவனத்தில் டிரைவர்களாக பணிபுரிந்தஅந்தர்யாமி, சுக்தேவ் சிங், திலக்ராஜ் என்ற 3 இந்தியர்கள் உட்பட 7 பேரை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
42 நாட்களுக்கு பிறகு பிணைக் கைதிகள் ஏழு பேரும் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களைவிடுவிக்க குவைத் லாரி நிறுவனம் 4.5 கோடி ரூபாயை தீவிரவாதிகளுக்கு வழங்கியது.
விடுதலைக்குப் பின் இந்தியர்கள் மூன்று பேரும் குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்ட னர்.நேற்று இரவு குவைத் ஏர்வேஸ் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர்.
இன்று காலை 6.35 மணிக்கு அவர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு விமானநிலையத்தில் உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது. வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அகமத் அவர்களை வரவேற்றார்.
முன்னதாக காலை 4.45 மணிக்கு வந்து சேர வேண்டிய விமானம், சுமார் 90 நிமிடங்களுக்கும் மேல் தாமதமாகவந்து சேர்ந்தது. தாமதத்திற்கான காரணம் தெரிவிக்கப்படாததால், விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தஅந்தர்யாமி, சுக்தேவ் சிங், திலக்ராஜ் ஆகியோரின் உறவினர்கள் சிறிது பதற்றமாகக் காணப்பட்டனர். விமானம்வந்து சேர்ந்த பின்பு அவர்கள் சகஜ நிலைக்குத் திரும்பினர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அகமத், இது ஒரு சந்தோஷமான தருணம். நமது சகோதரர்களைவரவேற்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். நமது ஒட்டுமொத்த பிரார்த்தனைக்கு கடவுள் செவிசாய்த்திருக்கிறார்.இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளித்த பத்திரிக்கையாளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
விமானம் தரையிறங்கிய பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த திலக்ராஜ் உணர்ச்சிவயப்பட்டவராகக் காணப்பட்டார்.அவர் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் இருந்து நாங்கள் குவைத் சென்றபோது, பாக்தாதிற்குவேலைக்கு அனுப்பப்படுவோம் என்பது எங்களுக்குத் தெரியாது என்றார்.
அந்தர்யாமி கூறுகையில், எங்களது விடுதலைக்காகப் பாடுபட்ட மத்திய அரசுக்கும், அமைச்சருக்கும் மற்றும் அரபுநாடுகளில் உள்ள நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பத்திரிக்கையாளர் சந்திப்புக்குப் பின், அவர்கள் தங்களது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தகுடும்பத்தினரைச் சந்தித்தனர்.
மூன்று பேரும் ஒரு குருத்துவராவுக்குச் சென்று கடவுளுக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனை செய்யவிருக்கின்றனர்.பின்னர் தங்களது சொந்த கிராமங்களுக்கு மாநில அதிகாரிகளின் பாதுகாப்புடன் செல்கின்றனர்.
மூன்று பேரும் ஒரு குருத்துவராவுக்குச் சென்று கடவுளுக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனை செய்யவிருக்கின்றனர்.பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்கள். அதனையடுத்து தங்களது சொந்தகிராமங்களுக்கு மாநில அதிகாரிகளின் பாதுகாப்புடன் செல்கின்றனர்.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications