ஜெயலட்சுமி: மேலும் ஒரு போலீஸ் சஸ்பெண்ட்
மதுரை:
சிவகாசி பெண் ஜெயலட்சுமி விவகாரத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தற்காலிக பணிநீக்கம்செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலட்சுமி மதுரை உயர்நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் 20க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் தன்னை சீரழித்தவிவகாரம் குறித்துக் கூறியிருந்தார்.
இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த மதுரை திடீர் நகர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், நிலக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர்ஷாஜகான், ஏட்டு கண்ணன் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இளங்கோவன் தவிர மற்ற 2 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் ஜெயலட்சுமியின் பட்டியலில் முக்கியமாக இடம் பெற்றிருந்த இன்ஸ்பெக்டர் மலைச்சாமியும் தற்போது தற்காலிகபணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜெயலட்சுமி விவகாரத்தில் இவர் பெயர் அடிபட்டதும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
இந்தச் சூழ்நிலையில், நேற்று இரவு மலைச்சாமியின் மதுரை ஆத்திகுளம் வீட்டில் தற்காலிக பணிநீக்க உத்தரவு வழங்கப்பட்டது.
ஜெயலட்சுமி சொகுசுக் கார் வாங்குவதற்காக வங்கி ஒன்றில் கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொகைக்கான கியாரண்டராகமலைச்சாமி கையெழுத்துப் போட்டிருந்தார். மேலும், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயலட்சுமியை மிரட்டி, அடைத்துகொடுமைப்படுத்தியதாகவும் மலைச்சாமி மீது ஜெயலட்சுமி புகார் தெரிவித்திருந்தார்.
இந்தக் காரணங்களுக்காக மலைச்சாமி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர்மலைச்சாமி, தமிழ்நாடு மின்வாரிய கண்காணிப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications