பொடா நீதிமன்றம் மீது வைகோ குற்றச்சாட்டு
திண்டிவனம்:
தன் மீதான பொடா வழக்கை வாபஸ் பெற பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி மறுத்து குறித்துகருத்துத் தெரிவிக்க வைகோ மறுத்துவிட்டார். அதே நேரத்தில் ஆரம்பத்தில் இருந்தே பொடாநீதிமன்றம் தனக்கு எதிரான நிலையையே கடைபிடித்து வருவதாகவும் கூறினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்கையும் வாபஸ் பெறதமிழக அரசுக்கு அனுமதி மறுத்துள்ளார் நீதிபதி ராஜேந்திரன்.
இது குறித்து திண்டிவனத்தில் பாதயாத்திரையில் இருந்த வைகோவிடம் செல்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது,
ஆரம்பத்தில் இருந்தே பொடா சிறப்பு நீதிமன்றம் (நீதிபதி ராஜேந்திரன்) எனக்கு எதிரானநிலையையே எடுத்து வந்துள்ளது. ஆனால், இப்போதைய அதன் தீர்ப்பு குறித்து நான் எந்தக்கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.
இறுதியில் நீதி நிச்சயம் வெல்லும் என்பதில் எனக்கு இப்போதும் நம்பிக்கை உள்ளது என்றார்.
பொடா நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பீர்களா என்றுகேட்டபோது, என் மீது போடப்பட்ட பொடா வழக்கே தவறு என்று உச்ச நீதிமன்றத்தில் நான்தொடர்ந்த வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது என்றார் வைகோ.
பொடா வழக்கில் கடந்த 2002ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி கைது செய்யப்பட்ட வைகோ கடந்தபிப்ரவரி 7ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 8ம் தேதி தனது தீர்ப்பை வழங்கிய பொடா மறு ஆய்வுக் குழு, வைகோ மீதானவழக்கை வாபஸ் பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், வழக்கை தமிழக அரசுவாபஸ் பெறவில்லை.
இதையடுத்து வைகோவின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 13ம் தேதிவழங்கிய உத்தரவில், வழக்கை வாபஸ் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஉத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்தே வழக்கை வாபஸ் பெறுவதாக பொடா நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்செய்தது.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications