ரஷ்யா கமாண்டோக்கள் அதிரடி: குழந்தைகள் மீட்பு
மாஸ்கோ:
தெற்கு ரஷ்யாவின் பெல்சன் நகரில் 200 ரஷ்யப் பள்ளிக் குழந்தைகள் உள்பட 350 பேர்தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த பள்ளிக்குள் ராணுவ கமாண்டோக்கள்அதிரடியாய் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
பள்ளியில் இருந்த பிணைக் கைதிகளும் குழந்தைகளில் பெரும்பாலானவர்களும் பத்திரமாகமீட்கப்பட்டுவிட்டனர்.
இந்தச் சண்டையில் 5 தீவிரவாதிகள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர். 13 தீவிரவாதிகள்தப்பியோடிவிட்டனர். 180 குழந்தைகள் உள்பட 250 பிணைக் கைதிகளும் காயமடைந்தனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன் பள்ளிக்குள் நுழைந்த செசன்ய தீவிரவாதிகள் குழந்தைகளையும்பெற்றோர், ஆசிரியர்களையும் சிறை பிடித்தனர். தாக்குதல் நடத்த மாட்டோம் என்று அறிவித்து,தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ரஷ்யப் படைகள், திடீரென இன்று 3குண்டுகளைப் போட்டு பள்ளியின் சுவர்களையும், கூரையைத் தகர்த்தனர்.
பின்னர் அதிரடியாக உள்ளே நுழைந்து பள்ளியை சிறை பிடித்த தீவிரவாதிகள் மீதும் தாக்குதல்நடத்தியபடி, குழந்தைகளையும் பிணைக் கைதிகளையும் மீட்டனர்.
2 பெண் தீவிரவாதிகள் தங்களுடன் சில குழந்தைகளை மனிதக் கேடயமாக வைத்துக் கொண்டுதப்பினர். மேலும் 13 தீவிரவாதிகள் பள்ளிக் கட்டடத்தில் இருந்து தப்பியோடிய பிணைக்கைதிகளுடன் கூட்டத்தோடு கூட்டமாக தப்பியுள்ளனர். 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னதாக ரஷ்யப் படைகளின் குண்டுவீச்சில் சுவர்கள் இடிந்து விழுந்ததும் தப்பியோடியகுழந்தைகள், பிணைக் கைதிகளை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் பலர்காயமடைந்தனர்.
ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமும் தீவிரவாதிகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தின. இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் சிக்கியும் பல குழந்தைகள் காயமடைந்துள்ளன.பெரும்பாலான குழந்தைகளும் பெரியவர்களும் மீட்கப்பட்டுவிட்டதாக ரஷ்ய ராணுவம்தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று 26 பெண்கள், 6 குழந்தைகளை தீவிரவாதிகள் விடுவித்திருந்தனர். இதில் ஒன்றுபச்சிளம் குழந்தையாகும்.
-
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications