சேது சமுத்திரத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி
டெல்லி:
ரூ. 2,000 கோடி செலவில் சேது சமுத்திரத் திட்டத்தை அமலாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.
இதன்மூலம் 140 ஆண்டு கால தமிழகத்தின் கனவு நனவாகவுள்ளது. இத் திட்டத்திற்கு மத்திய கப்பல்போக்குவரத்துத்துறையும், தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகமும் ரூ. 100 கோடியை அளிக்கவுள்ளன.
சென்னை துறைமுகம், எண்ணூ
இப்போது வங்காள விரிகுடாவில் இருந்து அரபிக் கடலுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக் கொண்டுபோகும் நிலைமை உள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தின்படி ராமேஸ்வரம் இலங்கை இடையே தனுஷ்கோடியைஅடுத்து கடல் ஆழப்படுத்தப்படும்.
இதன்மூலம் பெரிய சரக்குக் கப்பல்கள் இதன் வழியே பயணிக்க முடியும். இப் பகுதி கடலின் ஆழம் பெரியகப்பல்கள் செல்வதற்கு ஏற்றதாக இல்லாததால் தான் இலங்கையை சுற்ற வேண்டிய நிலைக்கு கப்பல்கள்தள்ளப்பட்டுள்ளன.
சேது சமுத்திரத் திட்டம் அமைக்கப்பட்டால் கப்பல்களின் பயண நேரம் 36 மணி நேரம் குறையும். தமிழகத்தில்கப்பல்களின் வருகை அதிகரிக்கும். இதனால் சென்னை, தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களை ஒட்டி கப்பல் சார்ந்ததொழில்கள் வளர்ச்சியடையும்.
இது குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சேது சமுத்திரக் கழகம் என்றதனி அமைப்பு உருவாக்கப்படும். இந்த நிறுவனத்துக்கு உடனடியாக ரூ. 800 கோடி ஒதுக்கப்படும். கடன்கள் மூலம்ரூ. 1,200 திரட்டப்படும், மேலும் தேவைப்படும் தொகையை இந் நிறுவனமே திரட்டிக் கொள்ளும்.
இந் நிலையில் சேது சமுத்திரக் கால்வாய் அமைக்கப்படும் ஆதம்ஸ் பால கடல் பகுதியை மத்திய தரைவழி மற்றும்கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு, அதிகாரிகளுடன் சென்று நாளை நேரில் பார்வையிடுகிறார்.












Click it and Unblock the Notifications