சிக்கலில் வைகோ: பொடா வழக்கு வாபஸுக்கு தடை
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீதான பொடா வழக்கை வாபஸ்பெறும் தமிழக அரசின் மனுவை ஏற்க பூந்தமல்லி பொடா நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.
இதனால் பொடா வழக்கில் இருந்து வைகோ விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வைகோ மற்றும் மதிமுக பிரமுகர்களான கணேசமூர்த்தி, வீர இளவரசன், புலவர் செவ்வந்தியப்பன்,பூமிநாதன், அழகு சுந்தரம், மணியம், நாகராஜன், கணேசன் ஆகியோர் மீதான பொடா வழக்குகள்செல்லாது என அறிவித்த பொடா மறு ஆய்வுக் குழு, இந்த வழக்குகளை வாபஸ் பெறுமாறு தமிழகஅரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. ஆனால், பொடா மறுஆயுவுக் குழுவின் உத்தரவுக்கு தமிழக அரசு பணிய வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோன்ற தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் வழங்கியது. மேலும் பொடா வழக்கு விசாரணைக்குத் தடைவிதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தமிழக அரசுஅறிவித்தது. அதற்கான மனுவையும் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்த மனுவில்,
தனது இன, மொழி உணர்வு காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும்ஆதரவாக வைகோ பேசியது பொடா சட்டத்தின் கீழ் தவறாகாது என பொடா மறு ஆய்வுக் குழுகூறியுள்ளது. இதனால் இந்திய தண்டனைச் சட்டத்தின் 321வது பிரிவின்படி இந்த வழக்கை வாபஸ்பெறுகிறோம் என்று தமிழக அரசு கூறியிருந்தது.
இந்த மனுவின் மீது நீதிபதி ராஜேந்திரன் இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
பொடா மறு ஆய்வுக் குழுவின் உத்தரவின் அடிப்படையில் தான் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாகதமிழக அரசு தனது மனுவில் கூறியுள்ளது. ஆனால், பொடா மறு ஆய்வுக் குழு இந்த நீதிமன்றத்தில்வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது நடந்து வந்த வழக்கை மனதில் கொள்ளவே இல்லை.
தனது விசாரணையை அரைகுறையாக முடித்து உத்தரவை வழங்கியுள்ளது. வைகோ மீது இந்தநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கையே ஆராயாமல், பொடா ஆய்வுக் குழு வழங்கிய உத்தரவைவைத்துக் கொண்டு, அவர் மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு சொல்வதைஏற்க முடியாது.
ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும்போது அதை வாபஸ் பெறுவது என்பது மிக அசாதாரணமாகசூழ்நிலையில் மட்டுமே அனுமதிக்க முடியும். இப்போது வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான வழக்கில்இந்த நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்கவில்லை,
மேலும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த வழக்கை வாபஸ் பெறுவதற்குஎந்தவிதமான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தமிழக அரசின் மனுவை தள்ளுபடிசெய்கிறேன். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும் என்று தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பு வழங்கப்பட்டபோது வைகோ நீதிமன்றத்தில் இல்லை. அவர் நடை பயணத்தில்இருப்பதால் மற்ற 8 பேர் மட்டுமே ஆஜராகியிருந்தனர்.
அதே நேரத்தில், 9 பேர் மீதான வழக்கு விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால்,அந்தத் தடை நீங்கும் வரை பொடா நீதிமன்றத்தில் வைகோ வழக்கில் விசாரணை ஏதும் நடக்காது.
இதற்கிடையே, பொடா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வைகோவின் சார்பில் உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
வழக்கு விவரம் கேட்கும் ஆய்வு குழு:
இதற்கிடையே வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்குகள் தொடர்பான அனைத்துஆவணங்களையும் வரும் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்குபொடா மறு ஆய்வுக் குழு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியும் ஆய்வுக் குழுவிடம் ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்












Click it and Unblock the Notifications