உடைக்கப்படும் பிள்ளையார் சிலைகள் !
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிள்ளையார் சிலைகளை உடைப்பதற்கு மனித உரிமை ஆணையம் எதிர்ப்புதெரிவித்துள்ளது.
சென்னை தி.நகரை சேர்ந்த வீரமணி என்பவர் மனித உரிமை ஆணையத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார். அவர்அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக அண்மைக் காலமாக பெரிய அளவில் பிள்ளையார் சிலைகளைதயாரிக்கிறார்கள். பெரிய சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்லும்போது, மின்சாரக் கம்பி மற்றும்தொலைபேசி கம்பிகளில் தட்டுவதால் சிலைகளின் சில பகுதிகளை அதைத் கொண்டு செல்பவர்களேஉடைக்கிறார்கள்.
சிலைகளை தண்ணீரில் கரையாத பொருட்களை கொண்டு தயாரிப்பதால், அவற்றை நீரில் விடும்போது கம்பால்அடித்து உடைக்கிறார்கள். இது போன்ற செயல்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாகும். மனித உரிமையைமீறும் செயலாகும் என்று தனது மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சம்பந்தம்,
முன்பெல்லாம் பிள்ளையார் சிலைகள் களி மண்ணால் செய்யப்பட்டதால், அவை விரைவில் நீரில் கரைந்து விடும்.ஆனால் இப்போது சிலர் சுய விளம்பரத்துக்காக தண்ணீரில் கரையாத பிளாஸ்டர் ஆப் பாரிஸைக் கொண்டுபெரிய சிலைகளை தயாரிக்கிறார்கள். அந்த சிலைகளை நீரில் விடும்போது, உடைப்பது பக்தர்களின் மதஉணர்வுகளை புண்படுத்துவதாக அமைகிறது.
மேலும் இவ்வாறு சிலைகளை உடைப்பதும் அவற்றின் மீது ஏறி நின்று கொண்டு மாலை அணிவிப்பதும் இந்தியதண்டனை சட்டம் 295 மற்றும் 295 ஏ பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இது தொடர்பாக தனதுபரிந்துரையை உள்துறை செயலாளர், இந்து அறநிலையத்துறை ஆணையர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்குஅனுப்பி இருப்பதாகத் தெரிவித்தார்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications