ரஷ்யா: பள்ளித் தாக்குதலில் 322 பேர் பலி
பெல்சன்:
தென் ரஷ்ய நகரான பெல்சனில் பள்ளிக் கட்டடத்தில் குழந்தைகளையும் பெரியவர்களையும்பிணைக் கைதிகளாக வைத்திருந்த தீவிரவாதிகள் மீது ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 155குழந்தைகள் உள்பட 322 பேர் பலியாகியுள்ளனர்.
தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே பள்ளிக் கட்டடத்தில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 259 பேரும், காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 63 பேரும்பலியாகியுள்ளனர்.
இதில் 155 குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்கள், 27 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர்ஆகியோர் அடங்குவர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 10 பேர் அரேபியர்கள் ஆவர்.
முதலில் 400 பேர் பிணைக் கைதிகளாக இருப்பதாக ரஷ்யா கூறி வந்தது. ஆனால், தாக்குதலுக்குப்பின் 650 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, அதில் 63 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 259 பேர்கட்டடத்துக்குள்ளேயே பலியாகியுள்ளனர்.
இதனால் பிணைக் கைதிகளாக இருந்தவர்களின் குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்களின்எண்ணிக்கை 1000க்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
ரஷ்யப் படைகளின் தாக்குதலில் 8 தீவிரவாதிகள் பள்ளிக்குள்ளும், 19 பேர் தப்பியோடி பிறகட்டடங்களில் மறைந்திருந்தபோதும் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மன்மோகன் இரங்கல்:
தீவிரவாதிகளிடம் சிக்கியிருந்த பெரும்பாலான பள்ளிக் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதுமகிழ்ச்சி அளிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு அனுப்பியுள்ள செய்தியில் பிரதமர்மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மிக சிக்கலான நேரத்தில் ரஷ்யப் படைகள் நடந்து கொண்ட விதத்தையும் அவர் பாராட்டியுள்ளார்.அதே நேரத்தில் பலியான குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியாவின்சார்பில் அஞ்சலி செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.
புடின் நேரில் ஆய்வு:
இந் நிலையில் இன்று காலை ரஷ்ய அதிபர் புடின் சம்பவம் நடந்த பள்ளிக்கு திடீரென நேரில் வந்துநடந்த விவரங்களை கேட்டறிந்தார். காயமடைந்து மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளவர்களையும் சந்தித்துப் பேசினார்.
கட்டட இடிபாடுகளில் மேலும் உடல்கள் கிடப்பதாகவும், காயமடைந்தவர்களில் பலரது நிலைமைமோசமாக இருப்பதாகவும், இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் எனவும் பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோடையையொட்டி மூடப்பட்டிருந்த இந்தப் பள்ளிக் கட்டடத்தில் கட்டட வேலைகள் நடந்துவந்தன. இதைப் பயன்படுத்தி கடந்த சில வாரங்களாக கட்டட பொருட்களுடன் ஆயுதங்கள்,வெடிகுண்டுகள், துப்பாக்கிகளை செசன்ய தீவிரவாதிகள் கொண்டு வந்து பள்ளியின்அண்டர்கிரவுண்ட் தளத்தில் பதுக்கி வைத்து வந்துள்ளனர்.
மேலும் ரஷ்யா மீது மிகப் பெரிய தாக்குதலுக்கு அவர்கள் தயாராகி வந்ததாகவும்தெரியவந்துள்ளது. கட்டட பொருட்களின் கீழ் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications