மதராசியை அவமானப்படுத்தும் தாக்கரே: அய்யர்
சென்னை:
பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யர், நக்கீரன் இதழுக்கு அளித்துள்ள சிறப்புப்பேட்டி:
அந்தமானில் நடந்த விழாவில் சாவர்க்கரைப் பற்றி நான் தவறாக ஏதும் பேசவே இல்லை.ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்த அந்தமான் கவர்னர் ராம் கப்சே கூட அப்போது உடனிருந்தார்.
சாவர்க்கருக்கு அங்கு ஒரு அவமரியாதையும் செய்யப்படவில்லை.
ஆனால், மராட்டியத்தில் சட்டமன்றத் தேர்தல் வருவதால், காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் பிரச்சாரம்செய்ய ஏதும் விஷயம் இல்லை என்பதால், மராட்டிய மன்னின் மைந்தர் சாவர்க்கர் குறித்துபொய்யான விவகாரத்தை கிளப்பி ஆர்ப்பாட்டம் செய்கிறது சிவசேனையும் அவரது கூட்டணிக்கட்சியான பா.ஜ.கவும்.
சாவர்க்கரை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகள் மராட்டிய மண்ணில் பலமுறைதோற்றுள்ளன. இம்முறையும் அதே நிலை தான் தான் ஏற்படும்.
என்னை அவமானப்படுத்துவதாகச் சொல்லி ஒரு கொடும்பாவி செய்து அதை செருப்பால்அடித்திருக்கிறார் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே.
ஒரு மணிசங்கர அய்யரை அவமானப்படுத்தவதற்காக தாக்கரே இதைச் செய்ததாக நான்நினைக்கவில்லை. ஒரு மதராசியை அவமானப்படுத்துவதே அவர் நோக்கம். இதனால் தான் எனதுஉருவ பொம்மைக்கு வேஷ்டி-சட்டை அணிவித்து, வைகோ அணிவது போல நீளமான துண்டைஅணிவித்து செருப்பால் அடித்து, எரித்திருக்கிறார்கள்.
தமிழர்களின் அடையாளத்தை அவமானப்படுத்தும் முயற்சி அது. ஏற்கனவே மதராசிகள் மீதுசிவசேனை நடத்தியுள்ள தாக்குதல்களை நினைவுகூர்ந்தால் இந்தச் செயலுக்கும் அர்த்தம் புரியும்.
சாவர்க்கரையும் ஜின்னாவையும் நான் ஒப்பிட்டுப் பேசியதாக இன்னொரு தவறான செய்தியையும்பரப்பியிருக்கிறார்கள். அதை வைத்துத் தான் திமுக தலைவர் கருணாநிதி என்னைக் கண்டித்தார்.
இது தொடர்பாக கருணாநிதிக்கு விளக்கக் கடிதம் அனுப்பினேன். அவரை தொலைபேசியில்தொடர்பு கொண்டும் நான் என்ன பேசினேன் என்பதை விளக்கினேன். எனது விளக்கத்தைமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.
மேலும் சென்னை வரும்போது அவரை சந்தித்தும் நேரில் விளக்குவேன்.
இவ்வாறு அய்யர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications