வட தமிழகத்தில் தொடர்ந்து கன மழை
சென்னை:
சென்னை உள்பட தமிழகம் முழுவதும், குறிப்பாக வட மாவட்டங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. மழையின்போது இடி தாக்கி 3 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கக் கடலில் ஆந்திர மாநிலம் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது தொடர்ந்துஅதே இடத்திலேயே நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை, புதுவை மற்றும் வட மாவட்டங்களில்தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை நல்ல மழை பெய்தது. சென்னையில் தூறல்பெய்து கொண்டுள்ளது. வேலூர், வாலாஜா, உதகமண்டலம், குன்னூர், வால்பாறை, ஈரோடு, அந்தியூர், நாமக்கல்,குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
இன்னும் 2 நாட்களுக்கு இந்த மழை தொடரும் என்றும் தென் மாவட்டங்களில் குறைவான அளவிலேயே மழைஇருக்கும் என்றும் சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இரவில் மழை அதிகளவில் இருக்கும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த மாதம் இரண்டாவதுவாரத்தில் வட கிழக்குப் பருவ மழையும் தொடங்கிவிடும் என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும் என்று கூறி தண்ணீர்ப்பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் சென்னை மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது வானிலை ஆராய்ச்சி நிலையம்.
இதற்கிடையே, மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகத்துள்ளது. இன்று காலை 8.30 மணிநிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 11,970 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 81.9அடியாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுவருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதில் இடி தாக்கி 2 பேர் இறந்தனர். அதே போல அந்தியூரில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் பவானி சாலையில் மரங்கள் விழுந்ததில் அங்கு சாலைப் போக்குவரத்துபாதிக்கப்பட்டது. ஈரோட்டில் இடி தாக்கியதில் ஒருவர் பலியானார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications